உத்தமவில்லன் திட்டமிட்டபடி வரும் மே-1-ம் தேதி வெளியாகும்

கமல்ஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் மே-1-ம் தேதியன்று வெளியாகும் என்று தமிழ்த் திரைப்படவுலகின் முக்கிய சங்கத்தினரின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ‘உத்தமவில்லன்’ படம் ரிலீஸாவது கஷ்டம். பட ரிலீஸ் நேரத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை போடப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இவைகளையெல்லாம் உண்மையில்லை என தெளிவுபடுத்த தமிழ்த் திரைப்படத் துறையின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி பத்திரிகைகளை அழைத்து “நிச்சயமாக ‘உத்தமவில்லன்’ படம் வரும் மே 1-ம் தேதி ரிலீஸாகும்…” என்று அறிவித்தனர் அதற்கு அனைத்து விதத்திலும் இந்த கூட்டமைப்பு உதவி செய்யும் என்றனர்.

Share