டொவினோ தாமஸ் நடித்த ‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ (ARM) படம் எப்படி இருக்கு ?

டொவினோ தாமஸ் நடித்த ‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ (ARM) படம் எப்படி இருக்கு ?

டொவினோ தாமஸ் நடிப்பில் 50 வது படமாக வெளியாகியுள்ள திரைப்படம் ‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ (ARM)

சின்ன சின்ன வேடங்களில் நடித்து, நாயகனாக உயர்ந்து, வித்தியாசமான படங்கள் மூலமாக மக்கள் மனங்களை கவர்ந்த, டொவினோ தாமஸின் ஐம்பதாவது படம் இது. ஐம்பாதவது திரைப்படம் என்பதால் பெரிய பட்ஜெட், வரலாற்று கதைக்களம் என வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.

பாரம்பரியமாக வீரனாக வாழ்ந்து வந்த பரம்பரை திருட்டு பட்டம் கட்டப்பட்டு வாழ்கிறது. நாயகனை நல்லவன் என்றாலும் கள்வன் என மக்கள் பழிக்கிறார்கள். கிராமத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த சிலை ஒன்று களவுபோக, அதனை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்குகிறார் நாயகன் அஜயன். அந்த சிலையின் பின்னணி என்ன? அதனை கதாநாயகன் அஜயன் எப்படி கண்டுபிடித்தார்? அவருக்கும் மூதாதையருக்கும் என்ன சம்பந்தம் என்பதே படத்தின் கதை.

1900களில் ஹரிபுரம் என்ற ஊரில் விண்கல் ஒன்று விழுகிறது. அதனை அறிந்த அரசர் தனது சமஸ்தானத்திற்கு எடுத்துச் சென்று, சில உலோகங்களை சேர்ந்து விளக்கு சிலை ஒன்றை செய்கிறார். அங்கு சில சம்பவங்கள் நடக்க, 1950களில் மணியன் (டொவினோ தாமஸ்) என்ற திருடன் யாராலும் பிடிக்க முடியாத பலம் வாய்ந்தவராக இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒருபுறமும், 1990களில் அஜயன் (டொவினோ தாமஸ்) குறித்த காட்சிகளும் என Non-Linear திரைக்கதையாக செல்கிறது.

மூன்று காலகட்டம் மூன்று வேடம் என டோவினோ தாமஸுக்கு ஏற்ற கதைக்களம், உடை நடை பாவனை எனும் மூன்று பாத்திரங்களுக்கும் வித்தியாசம் காட்டி கவர்கிறார் டோமினோ தாமஸ்

கிருத்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி என மூன்று கதாநாயகிகள். ஆனால் இந்த மூன்று பேரில் சுரபி லட்சுமிக்கு மட்டுமே தான் ஏதோ சொல்லிக் கொள்ளும்படி என பாத்திரம். கீர்த்தி செட்டி வெறும் மூன்று காட்சிகளில் வந்து போகிறார், அதைவிட கொடூரம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஒரே ஒரு காட்சி தான்.

படத்தின் மிகப்பெரிய ஒளிப்பதிவு, இசை. ஜோமோனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. திபு நினான் தாமஸின் இசை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் மாயாஜாலம் கலந்த கதையை திரையில் மாயாஜாலமாகவே காட்டியிருக்கிறார்கள், சண்டைக்காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கிறது. ஒரு நாவலை திரைக்கதையாக்கியது போல் உள்ளது படம்.

கதையில் நடக்க இருப்பது முன்பே தெரிந்துவிடுவதால் பெரிய சுவாரஸ்யங்கள் ஏதுமில்லை, வழக்கமான Action பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது இந்த ARM.

2.75/5

Share