இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு !!

இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு !!

Prathab Enterprises பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரிப்பில், இயக்குநர் பாப் சுரேஷ் இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் சயின்ஸ் பிக்சன் வகையில் உருவாகியுள்ள படம் “இரவின் கண்கள்”. வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசியதாவது..
Prathab Enterprises ல் அடுத்தடுத்து நிறைய நல்ல படைப்புகள் வரவுள்ளது அதில் இப்படத்தை வெளியிடச் சொல்லி என்னை அணுகினார்கள். படத்தின் ஐடியாவே எனக்கு மிகப்பிடித்திருந்தது. ஒரு செல்ஃபோன் என்ன செய்யும் என்பதே இன்றைய காலகட்டத்தில் ஆச்சரியகரமாக இருக்கிறது. அதில் ஏ ஐ வைத்து ஒரு அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. திரையரங்கில் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

எடிட்டர் இமான் பேசியதாவது…
இது சின்ன பட்ஜெட் படம் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தைப் பெரிதாக எடுத்துச் செல்லும் தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்

ஒளிப்பதிவாளர் கீதா கரண் பேசியதாவது…
மிக சின்னதாக ஆரம்பித்த படம், இந்த அளவு பெரிதாக எடுத்து வந்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாப் சுரேஷுக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்

கிரி துவாரகேஷ் பேசியதாவது…
இரவின் கண்கள் முதல் நன்றி இயக்குநர் சுரேஷ்க்கு தான். ஏ ஐ பயன்படுத்தி ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியுள்ளார். பாப் சுரேஷ் நாளைய இயக்குநரில் வித்தியாசமான குறும்படங்கள் செய்தவர். அவரது பல நாள் ஆசை, இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்

இசையமைப்பாளர் சார்லஸ் தனா பேசியதாவது…
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. மிக வித்தியாசமான திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார். படத்திற்குள் நிறைய டிவிஸ்ட் ஆச்சரியங்கள் இருக்கிறது. இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

டாலி ஐஸ்வர்யா பேசியதாவது…
எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைவருக்கும் நன்றி. இப்படம் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இயக்குநர் பாப் சுரேஷ், ஜினீத் என எல்லோருக்கும் நன்றி. இந்தப்படம் மிக வித்தியாசமான கான்செப்ட், மனதிற்கு நெருக்கமான மிகவும் பிடித்த படம். வளர்ந்து வரும் எங்களைப் போன்ற புதியவர்களை ஆதரிக்க வேண்டுகிறேன். இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்

நடிகர் பிரஜன் பேசியதாவது…
இயக்குநர் என்னிடம் இப்படத்தின் கதையைச் சொன்னார் மிக அருமையாக இருந்தது. வேறொரு கதை தான் அவர் செய்வதாக இருந்தது, அந்த நிலையில் இப்பட வாய்ப்பு கிடைக்கவே இதை செய்தார். புதிய முகங்கள் மிகவும் அர்ப்பணிப்போடு உழைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். இந்தப்படம் வெற்றியடைந்து பிரதாப் சார் அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் தர வேண்டும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாப் சுரேஷ் பேசியதாவது…
எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைத்து திரை பிரபலங்களுக்கும் நன்றி. இப்படம் மிக சின்னதாக ஆரம்பித்த படம் இப்படம் வெளியாகுமா என எங்களுக்கே சந்தேகம் இருந்தது, இன்று இப்படம் இந்த நிலைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை வெளியிடும் ஹரி உத்ரா அவர்களுக்கு நன்றி. பிரதாப் சாருக்கு நன்றி. சயின்ஸ் பிக்சன் ஜானரில் சுவாரஸ்யமான படம் தந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் பிரதாப் பேசியதாவது…
எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைத்து திரை பிரபலங்களுக்கும் நன்றி. இந்த படத்தைச் சிறிய அளவில் ஆரம்பித்து இப்போது பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறோம், ஆனாலும் திரையரங்குகள் குறைவாகவே கிடைக்கும், பத்திரிகையாளர்கள் மனதை வைத்து ஏற்படத்தை பாராட்டினால் எங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துள்ளோம். ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…
எனக்கு பிரசாத் லேப் சொந்த வீடு போல் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் இயக்குநர்கள் கதை சொல்வதே இல்லை. ஆனால் அப்போதெல்லாம் கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சிலர் கதை சொன்னது போல் படம் எடுப்பதில்லை. அங்கு தான் பிரச்சனை. நான் அப்போது விஜய் சாரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டேன். படமும் முடிந்து விட்டது. இந்த தியேட்டரில் தான் நானும் விஜய் சாரும் திருப்பாச்சி படம் ஃபர்ஸ்ட் காபி பார்த்தோம். அப்போது விஜய் சார் நீங்க கதை சொன்னதை விட மூன்று மடங்கு பலமாக இருக்கிறது என்றார். அப்போது தான் மகிழ்ச்சி வந்தது. இதோ இந்த இரவின் கண்கள் படமும் மிகப்பெரிய வெற்றி அடையும். இப்படத்தில் வித்தியாசமான கதை சொல்லியுள்ளார்கள். ஏ ஐ வைத்து வித்தியாசமாக யோசித்துள்ளார்கள். ரஜினி சார் சொன்னாரே சிஸ்டம் கெட்டுப்போச்சு என்று அது போல் பாப் சுரேஷ் சிஸ்டம் கெட்டுப்போனதை வைத்து படம் பண்ணியிருக்கிறார். படம் வித்தியாசமான திரில்லர் மூவி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
ஹாலிவுட்டில் சமீபத்தில் ஏ ஐ வைத்து நடிகரே இல்லாமல் நடிகரை ஏ ஐ இல் உருவாக்கிப் படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் ஹாலிவுட்டே சேர்ந்து ஏ ஐ க்கு எதிரான பெரிய போராட்டம் செய்தது. அதனால் இனிமேல் ஏ ஐ வைத்துப் படமெடுப்பதில்லை என முடிவெடுத்து விட்டார்கள். தம்பி பாப் சுரேஷ் அந்த ஏ ஐ வைத்து, வித்தியாசமான கதையைச் சொல்லியிருப்பது டிரெய்லரில் தெரிகிறது அவருக்கு வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில் வாழ்வியலைப் படமாக எடுப்பது குறைந்து விட்டது. இப்போதெல்லாம் ஓடிடி விற்றால் தான் படம் ரிலீஸ் செய்ய முடிகிறது. ஓடிடி உலகமெல்லாம் இருக்கக் கூடிய ஒரு தளம் அதில் படம் பார்ப்பவர்கள் இரவில் தான் பார்க்கிறார்கள் அவர்கள் அந்த இரவில் சில காட்சிகள் இருந்தால் தான் பார்க்கிறார்கள். அந்த மாதிரி காட்சிகள் படத்திலிருந்தால் தான் படம் ஓடிடி வாங்குகிறார்கள். பேரரசு படமெடுத்தால் இனி அது மாதிரி தான் படமெடுக்கவேண்டும். இன்றைக்கு வந்த ஆல்பம் பாடலில் அந்த மாதிரி மஜா காட்சிகள் இருக்கிறது. உணர்வுப்பூர்வமான படங்கள் வருவதில்லை என்கிறார்கள் ஆனால் அப்படிப் படமெடுத்தால் படம் ஓடாது. இப்போது படத்தில் கஞ்சா, பத்துப்பேர் தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் தான் வருகிறது. பெரிய ஹீரோக்கள் மாற வேண்டும், உணர்வுப்பூர்வமான படங்களில் நடிக்க வேண்டும். இப்போதுள்ள இயக்குநர்கள் நல்ல தரமான படங்களை எடுக்க முன் வாருங்கள். மாணவர்கள் மனதில் வக்கிரத்தைப் படங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு நடக்கும் குற்றங்கள் சினிமாவின் தாக்கம் இருக்கிறது. இரவின் கண்கள் திறந்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் அருமையாக இருக்கிறது, முதல் படம் போல் தெரியவில்லை, நல்ல அனுபவம் உள்ளது போல் உருவாக்கியுள்ளார்கள். படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாப் சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். டோலி ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : கீதா கரண்
இசை : சார்லஸ் தனா
எடிட்டிங் : இமான்
பாடல்கள் : மூர்த்தி
மக்கள் தொடர்பு : மணவை புவன்
கதை, திரைக்கதை : பாலசுப்ரமணியம் K. G
திரைக்கதையமைத்து, இயக்கி நாயகனாக நடித்துள்ளார் – பாப் சுரேஷ்.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Share