சோழன் பரம்பரையில London தாதா! – பட்டையை கிளப்பும்! “ஜகமே தந்திரம்” முன்னோட்டம்

சோழன் பரம்பரையில London தாதா! – பட்டையை கிளப்பும்! “ஜகமே தந்திரம்” முன்னோட்டம்

Netflix நிறுவனம், இன்று  தமிழின் மிகவும்  எதிர்பார்ப்புகுரிய படமான  “ஜகமே தந்திரம்” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் “ரகிட ரகிட ரகிட” என உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் பங்குகொள்ளும், லோக்கல் கேங்ஸ்டரின் மிகப்பெரிய பயணத்தை, பிரமாண்டமாக திரையில்   வடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கேங்ஸ்டராக அனைவரின் மனம் கவர்ந்த நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகிறது.

தமிழ் ரசிகர்களுக்கு கோடை காலத்தின், பெரும் கொண்டாட்டமாக வெளியாகும் இப்படத்தில் தனுஷ், , ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சரத் ரவி மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் பரபர திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

 

மிகவும்  எதிர்பார்ப்புகுரிய படமான  “ஜகமே தந்திரம்” திரைப்படம்  208 மில்லியன் சந்தாதாரர்கள் பார்க்கும் வகையில் Netflix தளத்தில் வெளியாகிறது. இப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது…

“ஜகமே தந்திரம்” எனது கனவு திரைப்படம். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். மிக விறுவிறுப்பான வகையில், உலகின் தற்போது நடைமுறையில் இருக்கும், மிகமுக்கியமான பிரச்சனையை, உள்ளூரில் இருக்கும் ஒரு கதாப்பாத்திரத்தை வைத்து, மிக சுவாரஸ்யமாகவும் கொண்டாட்டத்துடனும்  உருவாக்கப்பட்ட திரைப்படம்.   ரசிகர்கள் தனுஷ் அவர்களின் அட்டகாசமான திறமையை, 190 நாடுகளில் Netflix தளத்தின் வழியே கொண்டாடலாம்.  YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது.

Netflix தளத்தில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகும்  “ஜகமே தந்திரம்”
படத்தை தவறவிடாதீர்கள் !

நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் :

எழுத்து, இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்

நடிகர்கள் : தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜோஷப் ஜோஜு ஜார்ஜ், கலையரசன், சரத் ரவி, ரோமன் ஃபியோரி,  சவுந்தர்ராஜா, துரை ராமசந்திரன், மாஸ்டர் அஷ்வத்

இசை : சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : ஷ்ரேயாஸ் கிருஷ்ணா

படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்

 

Share