`கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் ஓவியா என்ற நெடுந்தொடர் ஆரம்பம்!

`கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் ஓவியா என்ற நெடுந்தொடர் ஆரம்பம்!

நட்பால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆளுமைப்பண்பால் பிளவுபட்டிருக்கும் இரு இளம்பெண்களின் கதை!

வரும் நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கி தினமும்  திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

 

சென்னை, 2018, நவம்பர் 21 : தமிழ் தொலைக்காட்சி தளத்தில் கதையின் உள்ளடக்கத்தையும் பெண்களைச் சித்தரிக்கும் விதத்தையும் மறுபரிசீலனை செய்து வருகிற கலர்ஸ் தமிழ், `ஓவியா’ என்கிற புதிய நெடுந்தொடரை ஒளிபரப்பவிருக்கிறது. இப்புதிய நிகழ்ச்சியில் எதிர்மாறான நட்புறவு அழகாக சித்தரிக்கப்படுகிறது. நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியானது, வார நாட்களில் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணியிலிருந்து 7 மணி வரை ஒளிபரப்பாகிறது. வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளவும் மற்றும் அவர்களது நட்பு பிணைப்பு சிதைக்கப்படாமல் பாதுகாக்கவும் வேண்டுமென்று முயற்சிக்கின்ற இரு தோழிகளுக்கிடையே நடக்கும் நிகழ்வுகளை இது சித்தரிக்கிறது.

 

மாறுபட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்டிருக்கும் ஓவியா மற்றும் காயத்ரி என்ற இரு பெண்களைச் சுற்றி இக்கதை பின்னப்பட்டுள்ளது. அவர்களது காதல் உணர்வுகளினால் சோதனைக்கு உட்படுத்தப்படும் அவர்களது நீண்டகால நட்புறவைச் சுற்றி இக்கதை வளர்கிறது. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பெண்ணாக இருப்பினும் ஓவியா அவளது கோட்பாடுகளையும், சித்தாந்தங்களை பின்பற்றுவதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறாள்; சுற்றியுள்ள அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் அவள், அவளது கனிவான நடத்தைக்காகவும், நேர்மைக்காகவும் பலரால் பாராட்டப்படுகிறாள். இதற்கு மாறாக வசதியான குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரியோ தனது இலக்குகளையும், இலட்சியங்களையும் அடைவதற்காக  எந்தளவுக்கும் மோசமாக செல்வதற்கு தயாராக இருப்பதோடு பிறரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முற்படுபவளாக இருக்கிறாள். இருப்பதில் திருப்திகொள்ளும் நபராக ஓவியா இருக்கின்றபோது,எந்த நேரமும் மகிழ்ச்சியைத் தேடி அலைபவளாக காயத்ரி இருக்கிறாள். இந்த இரு இளம்பெண்களின் கதையும் மற்றும் அவர்களது காதல் உணர்வுகளினால் அவர்களுக்கிடையே ஏற்படும் பிளவும் இந்த கதையின் மையக்கருவாக அமைந்திருக்கிறது.

 

இந்த புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சி ஆரம்பமாவது குறித்து கருத்து தெரிவித்த கலர்ஸ் தமிழ்-ன் பிசினஸ் ஹெட் திரு.அனுப் சந்திரசேகரன், “தினசரி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்களின் சலிப்பூட்டும் வழக்கமான உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு தனித்துவமான கதைக்களத்தைக் கொண்டதாக ஓவியா என்ற இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. எங்களது நெடுந்தொடர் நிகழ்ச்சியின் வழியாக சரியான கோணத்தில் பெண்களின் உணர்வுகள்ஆற்றல் மற்றும் சக்தியை கலர்ஸ் தமிழ் காட்சிப்படுத்துகிறதுகொண்டாடி மகிழ்கிறது. இப்பாதையில் ஒரு முன்னோடித்துவ முன்னெடுப்பாகதினசரி அடிப்படையில் ஒரு வீரனைப்போல வெளியார்ந்த மற்றும் உள்ளார்ந்த அரக்கன்களை எதிர்த்து போராடுகிற ஒவ்வொரு பெண்ணின் மனஉறுதியை ஓவியா மிக நேர்த்தியாக சித்தரிக்கும். தனது வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பார்க்கக்கூடியதாகவும்மனதை ஈர்க்கும் கதையாகவும் இது இருக்குமென்பது நிச்சயம்,” என்று கூறினார்.

 

இந்த தனித்துவமான நட்புறவின் கதையானது தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30லிருந்து 7 மணி வரை கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படுவதை தவறாது கண்டு ரசியுங்கள்.

Share