விஸ்வரூபம் 2 – படம் எப்படி ?

விஸ்வரூபம் 2 – படம் எப்படி ?

இயக்கம் : கமலஹாசன்

நடிப்பு : கமலஹாசன்

பூஜா குமார்

ஆண்ட்ரியா

ஷேகர்கபூர்

ராகுல் போஸ்

ஆனந்த் மஹாதேவன்

ஜெயதீப் அலவாத்

ஒளிப்பதிவு : சனு வர்கீஸ்

ஷம்தத் சைனுதீன்

படத்தொகுப்பு : மகேஷ் நாராயணன்

விஜய் ஷங்கர்

இசை : ஜிப்ரான்

தயாரிப்பு : சந்திரஹாசன்

கமலஹாசன்

நீளம் : 141 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : முதல்பாகத்தில் அமெரிக்காவில் நடக்கவிருந்த குண்டுவெடிப்பை தடுத்து நிறுத்திவிட்டு, லண்டன் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகளை தடுத்து நிறுத்தி எப்படி வில்லன் ஒமரை வெல்கிறார் என்பதை விவரிக்கிறது திரைக்கதை

 

பலம் …

+ கமல்ஹாசன் : எழுத்து, நடிப்பு என்று ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து இருக்கிறார் கமல்ஹாசன். ஐயர் கதாபாத்திரத்திடம் தேசப்பற்றை பற்றி பேசும் காட்சியிலும், இரண்டாம்பாதியில் அன்னையைக்கண்டு உருகும் இடத்திலும் மிளிர்கிறார்.

 

+ ஆழ்கடல் காட்சிகள் : இடைவேளைக்கு முன்னர் வரும், ஆழக்கடல் கப்பல் வெடிகுண்டு காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் ராகம். ஆங்காகே வரும் லாஜிக் மீறல்கள் அப்பட்டம். முதல்பாதியில் வரும் கார் விபத்துக்காட்சியும் நன்று.

 

+ இசை : பாடல்கள், பின்னணி இசை, இரண்டிலும் முத்திரை பதிக்கிறார் ஜிப்ரான். ஆங்காங்கே பாகம்1’ன் தீம் இசையை பயன்படுத்தி இருந்தாலும், வித்யாசமான பின்னணி சப்தங்கள் மூலம் கவனத்தை ஈர்க்கிறார்.

 

+ வசனம் : படத்தின் பல காட்சிகளில் வசனங்களின் ஆதிக்கமே அதிகம். பூஜாகுமார் – கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளில், வசனங்களின் மூலம் காதல் மலர்வது அழகு. பல இடங்களில், அரசியல், தீவிரவாதம், மதம் சம்பந்தப்பட்ட வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

பலவீனம் …

– திரைக்கதை : ஆங்காங்கே ஆக்ஷன் காட்சிகளில் மிளிர்ந்தாலும், பல சமயங்களில் நீளமான காட்சிகளால், திரைக்கதையில் தோய்வு ஏற்படுகிறது. லாஜிக் மீறல்கள் அவ்வப்போது தென்பட்டாலும், பெரும்பாலும் கதை குழப்பமில்லாமல் நகர்கிறது.

 

– படத்தொகுப்பு : ஒரு மணி நேரத்திற்கு மேல் ஓடும் முதல்பாதி நீளமாய் செல்ல, 50 நிமிடம் மட்டுமே ஓடும் இரண்டாம்பாதி, எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடக்கிறது. குறைந்தது 15 நிமிடங்களாவது நீளத்தை குறைத்திருந்தால், திரைக்கதை மேலும் மேம்பாட்டு இருந்திருக்கும்.

 

– வில்லன் : முதல்பாகத்தின் பெருமைகுதியை ஆக்கிரமித்த ஓமர், இப்படத்தில் கடைசீ காட்சிகளில் மட்டும் வந்துபோகிறார். மேலும் அவர் செய்யும் செயல்கள், அவர் கதாபாத்திரத்தையே மழுங்கடிக்கும் ரகமாக இருந்தது. மேலும், முதல்பாதியில் வரும் ஐய்யர் கதாபாத்திரம் படு வீக், அவரின் காரண காரியங்கள் யாவும் சரிவர விளக்கப்படவில்லை.

 

ஷேகர்கபூர், பூஜாகுமார், ஆண்ட்ரியா கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இந்த பாகத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. முதல்பாகத்தில் பின்னணியில் மட்டுமே இருந்த இம்தியாஸ் கதாபாத்திரம், இந்த முறை முக்கியமான கதாபாத்திரமா ஆக்கப்பட்டது. மாற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரவர் வேலையை செவ்வன செய்திருக்கிறார்கள்.

 

முதற்பகுதியில் விட்டுப்போன கதைகளை கூறுவதுடன், ஒரு புதிய களத்தில் கதைகூற முற்பட்டிருக்கும் இயக்குநர் கமலஹாசனுக்கு பாதி வெற்றி மட்டுமே கிட்டிருக்கிறது எனலாம்.

 

மொத்தத்தில் : நீளமான காட்சிகளையும், வசனங்களையும் சரிவர குறுக்கி, காட்சிகளை நசுக்கி இருந்தால், மேலும் மேம்பாட்டிற்கும் இந்த விஸ்வரூபம்.

 

மதிப்பீடு: 2.75/5 …

Share