கேணி – படம் எப்படி ?

கேணி – படம் எப்படி ?

இயக்கம் : நிஷாத்

நடிப்பு : ஜெயப்பிரதா

பார்த்திபன்

அனுஹாசன்

ரேவதி

நாசர்

MS.பாஸ்கர்

தலைவாசல் விஜய்

ஒளிப்பதிவு : நௌஷத்ஷெரீப்

படத்தொகுப்பு : ஸ்ரீகுமார் நாயர்

இசை : M.ஜெயச்சந்திரன்

பிஜிபால்

தயாரிப்பு : சஜீவ் P.K.

அன்னே சஜீவ்

நீளம் : 142 நிமிடங்கள்.

 

நீரின்றி தவித்த கிராமத்து மக்களுக்கு, தண்ணீரோடு சேர்த்து, தங்கள் உரிமையையும்  போராடி மீட்டுத்தந்த ஒரு பெண்மணியின் சமூக பயணம்.

 

கதைச்சுருக்கம் : இந்திரா (ஜெயப்பிரதா), எனும் புரட்சிப்பெண்மணியின் சாதனைகளைக் கண்டு ஆராயச்செல்லும் மூன்று பத்திரிக்கையாளர்கள், அவர்களின் பின்னணியையும், அவர் செய்த சாதனையை ஆவணப்படுத்தி வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள்.

 

பலம் . . .

+ கதைக்களம் : பூமியை வெகுவிரைவில் நெருங்கும் அபாயமான தண்ணீர் பஞ்சத்தை அணுகும் இப்படத்தின் கதைக்களம் படத்திற்கு பெரியபலம்.

 

+ ஒளிப்பதிவு : தற்கால நிகழ்வுகளை நீல நிறத்திலும், பிளாஷ்பேக் காட்சிகளை பழுப்பு நிறத்திலும் ஒளியூட்டி காட்டும் ஒளிப்பதிவாளர் நௌஷத்ஷெரீப்’பின் கேமரா கோணங்கள் நன்று.

 

+ இசை : வயலின் வருட ஒலிக்கும் படத்தின் ‘தீம்’ இசையில் துவங்கி, படத்தின் பெரும்பான்மையான இடங்களில் வரும் பிஜிபாலின் பின்னணி இசை நன்று. M.ஜெயச்சந்திரனின் பாடல்கள், சுமார் ரகம்.

 

பலவீனம் . . .

– திரைக்கதை : படம் முடியும் வரை திசைமாறி, ஒரு நேர்கோட்டில் பயணிக்காத திரைக்கதை படத்திற்கு பெரும் பலவீனம். இடைவேளை வரை, படம் எதை நோக்கி பயணிக்கிறது என்றே யூகிக்க முடிவதில்லை.

 

– இரு மொழி குழப்பங்கள் : கேரளா – தமிழக எல்லையை கதைக்களமாக கொண்டதாலும், பாதி படம் கேரளாவில் நடப்பதாலும், பல கட்சிகளில் வசனம் மலையாலத்திலேயே அமைந்திருப்பது மற்றொரு பலவீனம்.

 

படத்தின் முதன்மைகதாபாத்திரம் ஜெயப்பிரதா, பல காட்சிகளில் தன்னை புரட்சிப்பெண்ணாக காட்டிக்கொள்ள கண்ணகி கெட்அப்’பிலேயே நடமாடுகிறார்கள். அவர் பலநேரங்களில் பேசும் வசனங்கள், ஹிந்தி சீரியலை தமிழில் டப் செய்த ரகம். பார்த்திபன், அவ்வப்பொழுது வந்து போகிறார். ரேவதி, அனுஹாசன், நாசர் அனைவரும் பாராட்டு பத்திர வசனங்களை ஏற்ற இரக்கத்தோடு சொல்லிவிட்டு செல்கின்றனர்.

 

கிணற்றை காவல்காக்கவந்த காவலர்கள், கிணத்துத்தண்ணியை சரக்கடிக்க பயன்படுத்துவது. தெரியாமல் குடிதண்ணீரில் விளையாடும் பிள்ளையிடம் நீரின் பெருமையை உணர்த்தும் அன்னை, தண்ணீர் பிரட்சனையை அலட்சியமாக அணுகும் அரசியல்வாதிகளின் மெத்தனப்போக்கு என, பல இடங்களில் தென்படும் இயக்குனர் நிஷாதின் தனித்தன்மையோடு, பிற்காலத்தில் வரும் அபாயத்தையும் நமக்கு உணர்த்துகிறது. ஆமையை விவேகத்தில் ஊர்ந்து செல்லும் திரைக்கதையும், படம் முழுவதும் தென்படும் டாக்குமெண்டரி தனத்தையும் தவிர்த்திருக்கலாம்.

 

மொத்தத்தில், படமுழுவதும் தெரியும் செயற்கை தனத்தையும், டாக்குமெண்டரி தனத்தையும் நீக்கிவிட்டு, படம் சொல்லும் மைய்யாக்கருத்தை மட்டும் பார்த்தால், இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சியே. இருப்பினும், திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

 

மதிப்பீடு : 2.5 / 5 . . .

Share