சொல்லிவிடவா – படம் எப்படி ?

சொல்லிவிடவா – படம் எப்படி ?

இயக்கம் : அர்ஜுன்
நடிப்பு : சந்தன் குமார்
ஐஸ்வர்யா அர்ஜுன்
சுஹாசினி மணிரத்னம்
K.விஸ்வநாத்
பிரகாஷ்ராஜ்
சதிஷ்
யோகிபாபு
‘மொட்டை’ராஜேந்திரன்
மனோபாலா
ஒளிப்பதிவு : HC.வேணுகோபால்
படத்தொகுப்பு : கே கே
இசை : ஜாஸி கிப்ட்
தயாரிப்பு : நிவேதா அர்ஜுன்
நீளம் : 156 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் :

1999’ல் கார்கில் போர் காலகட்டத்தில், போர் காட்சிகளை பதிவுசெய்ய சென்னையிலிருக்கும் 2 முக்கிய செய்தி சேனல்கள் சார்பாக சஞ்சய் (சந்தன் குமார்) மற்றும் மது (ஐஸ்வர்யா) ஆகியோர் போர் நடக்கும் கார்கில் காலத்திற்கு நேரடியாக செல்கின்றனர், பின்னர் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை.

 

பலம் . . .

+ போர்காட்சிகள் : நிஜ கார்கில் கோப்புக்கட்சிகளுடன், சித்தரிக்கப்பட்ட காட்சிகளையும் சரி பங்கு கலந்து, ஒரு நிஜ போரை கண்ணில் காணும் அனுபவத்தை அளிக்கிறது இரண்டாம்பகுதி போர் காட்சிகள்.

+ ஒளிப்பதிவு : கலர்புல் காதல் காட்சிகள், நெஞ்சுருக்கும் போர் காட்சிகள் என்று கலந்துகட்டி, கண்களுக்கு விருந்து படைக்கிறார், ஒளிப்பதிவாளர் HC.வேணுகோபால். இரண்டாம்பாதி ஒளிப்பதிவும் மேக்கிங்குமே படத்திற்கு மிகப்பெரிய பலம்.

+ இசை : ‘சொல்லிவிடவா’ பாடலும், ஜாஸி கிபிட்’டின் தேர்ந்த பின்னணி இசையும் படத்தை தாங்கி பிடிக்கிறது. மற்ற பாடல்களும் அது வைக்கப்பட்டிருந்த இடமும் படு சுமார்.

 

பலவீனம் …

– திரைக்கதை : முதல்பாதி காதல் காட்சிகளும், இரண்டாம்பாதி போருக்கு அப்பாற்பட்ட கட்சிகளும் அதற்கான படமாக்களிலும் ஏகப்பட்ட பழமை சாயல். பல காலமாக பல படங்களில் நாம் பார்த்த காட்சிகளையே நமக்கு திருப்பி போட்டு காட்டும் ரகம்.

– கதாபாத்திரங்கள் : ஹீரோ ஹீரோயின் துவங்கி பல கதாபாத்திரங்களும் செயற்கை தன்மை மேலோங்கி தெரிகிறது.

சண்டைக்காட்சிகளில் மிளிரும் ஹீரோ சந்தன்குமார், காதல்காட்சிகளில் கொஞ்சம் ‘டல்’ அடிக்கிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் தோன்றும் எல்லா காட்சிகளிலும் செயற்கை சாயல் ஏராளம். சதிஷ், யோகிபாபு ஆகியோர் முதல்பாதியில் கிச்சுகிச்சு மூட்ட முயற்சிக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திரம் முழுக்க திணிப்பு. சுஹாசினி மணிரத்னம், K.விஸ்வநாத், மனோபாலா, பிரகாஷ்ராஜ் போன்ற சீனியர் நடிகர்கள் சொற்ப கதாபாத்திரங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டுப்பற்றையும், முதியோரின் பராமரிப்பையும் பறைசாற்றும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மைய்யாக்கதையை பாராட்டினாலும், பழமையை சுமந்துவரும் இப்படத்தின் திரைக்கதை, ஒரு அளவிற்கு மேல் நம் பொறுமையை சோதிப்பதுடன், டப்பிங் படத்தை பார்க்கும் உணர்வையும் நமக்கு தருகிறது. பல தரமான படங்களை நமக்கு தந்த சீனியர் இயக்குனரான அர்ஜுனால், இன்னுமும் சிறந்த படைப்பை நமக்கு கொடுத்திருக்க முடியும்.

 

மொத்தத்தில் : முற்பாதியில் தொய்வையும், திரைக்கதையில் படிந்திருக்கும் பழமை சாயலையும் தவிர்த்திருந்தால், இன்னும் மெருகேறிய காதல்காவியமாக வந்திருக்கும் இந்த சொல்லிவிடவா.

 

மதிப்பீடு : 2.5 / 5 . . .

Share