பலூன் – படம் எப்படி ?

பலூன் – படம் எப்படி ?

இயக்கம் : சினீஷ் ஸ்ரீதரன்

நடிப்பு : ஜெய்

அஞ்சலி

ஜனனி

யோகிபாபு

கார்த்திக் யோகி

ராமச்சந்திரன் துரைராஜ்

நாகிநீடு

 

ஒளிப்பதிவு : R. சரவணன்

படத்தொகுப்பு : ரூபன்

இசை : யுவன் ஷங்கர் ராஜா

தயாரிப்பு : திலீப் சுப்புராயன்

அருண் பாலாஜி

நீளம் : 145 நிமிடங்கள்

 

சாதிவெறியால் பலியான ஒரு ஜோடியின் பழிவாங்கும் படலமே பலூன் . . .

 

கதைச்சுருக்கம் : தனது முதல்பட கதை நிராகரிக்கப்பட்டு, அதற்குப்பதிலாக பேய் பட வாய்ப்பு ஒன்று கதவைத்தட்ட, இயக்குனர் ஜீவா (எ) குட்டி (ஜெய்) மற்றும் அவரது மனைவி ஜாக்குயிலின் (அஞ்சலி) மற்றும் அவர்களது நண்பர்களுடன் ஊட்டிக்கு நிஜ பேய் பங்களாவை தேடிப்போக, பின்னர் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பே பலூன்.

 

பலம் . . .

 

+ ஒளிப்பதிவு : படத்தின் தலைப்புக்கேற்ப, Frame முழுவதும் வண்ண கோலங்கள். வீட்டிற்கு உட்புறம் வரும் Drone காட்சிகள் அழகு. Washing machine’னுக்குள் கேமரா, கண்ணுக்குள் ஆரமிக்கும் பிளாஷ்பேக் மற்றொரு கண்ணில் முடிவடைவது, என்று இப்படத்தில் ஒளிப்பதிவாளர் R.சரவணனின் பங்கு மகத்தானது.

 

+ இசை & ஒலி வடிவமைப்பு : யுவனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம், பின்னணியில் மேலும் திகிலூட்ட, அங்கங்கே ஒலி வடிவமைப்பும் கைகொடுத்திருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம்.

 

+ காமெடி காட்சிகள் : யோகிபாபு, கார்த்திக் யோகி கூட்டணியில், காமெடி காட்சிகள் அனைத்தும் நன்று. இரண்டாம்பாதியில் பல்வேறு இடங்களில் வாய்விட்டு சிரிக்கும்வண்ணம் அமைந்த யோகிபாபுவின் Oneliners நன்று.

 

பலவீனம் . . .

 

– திரைக்கதை : படத்தின் அநேக இடங்களில் நம்மால் யூகிக்கமுடிந்த காட்சிகள், அதே வரிசையில் வருவது படத்திற்கு பெரும் பலவீனம்.

 

–  பிற படங்களின் குறியீடு : படத்தின் பல்வேறு இடங்களில், பிற படங்களின் குறியீடுகள் வசனங்களாகவோ, திரைவழியாகவோ, பின்னணி இசையாகவோ வருவதால், படத்தின் தனித்தன்மை அவ்வப்பொழுது நீர்த்து விடுகிறது.

 

பிளாஷ்பேக் காட்சியில் ஜெய்யின் தோற்றமும், அவரின் நடிப்பும் படத்திற்கு கொஞ்சம் கூட ஒன்றாமல் தெரிகிறது, ஆனால் நிகழ்கால காட்சிகளில் அவரது நடிப்பு நன்று. அஞ்சலியின் கதாபாத்திரம், இரண்டாம்பாதியில் மிளிர்கிறது. ஜெய்யின் அண்ணன் மகனாக வரும் சிறுவன், கவனத்தை ஈர்க்கிறான். ஜனனி வந்து போகிறார். ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் நாகிநீடு, டெம்ப்லேட் வில்லன்கள்.

 

பலூன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், அவை படமாக்கப்பட்ட விதமும் புதுமை. லொகேஷன் மாறி மாறி வரும் கிளைமாக்ஸ் காட்சிகள், அதற்க்கு பின்னர் வரும் அதிரடி திருப்பங்கள் என்று கடைசீ 20 நிமிடங்கள் லாஜிக் ஓட்டைகள் அனைத்தையும் அடைத்து நம்மை யோசிக்கவிடாமல் செய்யும் இயக்குனர் சினீஷ் ஸ்ரீதரனின் கிம்மிக் வேலைகள், அவரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அதே புத்திசாலித்தனத்தை இரண்டாம்பாதி திரைக்கதையிலும் காண்பித்திருந்தால், பலூன் அவருக்கு ஒரு பெயர்சொல்லும் படமாக அமைந்திருக்கும்.

 

மொத்தத்தில் : காலம் கடந்து வேகமெடுக்கும் திரைக்கதை, ரசிகர்களை ஒன்றவைக்கமுடியாத கதைக்களம் என்று தடுமாற்றங்கள் நிறைந்திருந்தாலும், கடைசீ கட்ட திருப்பணிகளில் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது இந்த பலூன்.

 

மதிப்பீடு : 2.5 / 5

Share