வேலைக்காரன் – படம் எப்படி ?

வேலைக்காரன் – படம் எப்படி ?

இயக்கம் : மோகன்ராஜா

நடிப்பு : சிவகார்த்திகேயன்

ஃபஹத் பாசில்

நயன்தாரா

பிரகாஷ்ராஜ்

ரோகினி

சினேகா

விஜய்வசந்த்

சதிஷ்

RJ பாலாஜி

ரோபோ ஷங்கர்

ஒளிப்பதிவு : ராம்ஜி

படத்தொகுப்பு : ரூபன்

விவேக் ஹர்ஷன்

இசை : அனிருத்

தயாரிப்பு : RD.ராஜா

நீளம் : 159 நிமிடங்கள்

 

உணவுப்பொருட்கள்ல நடக்குற கலப்படங்களை பற்றியும், அதனால நம்ம உடல்நிலையில ஏற்படுற மாற்றங்களையும் முடிஞ்ச அளவுக்கு சுவாரரசியமா சொல்லி இருக்குற படம் தான் வேலைக்காரன்.

 

மூலக்கதை : தன்னோட கொலைகார குப்பத்த, ரவுடி காசி (பிரகாஷ்ராஜ்) கைல இருந்து வெளியில கொண்டுவர ஆசைப்படுறார் அறிவு (சிவகார்த்திகேயன்). ஆனா, அவரோட குடும்ப சூழ்நிலை காரணமா, ஒரு சர்வதேச கம்பெனில மார்க்கெட்டிங் வேலைக்கு சேருறாரு, ஒரு கட்டத்துல அவரு விக்குற பொருட்கள் மனித உடலுக்கு கெடுதின்னு அவருக்கு தெரியவர, அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்த திரைக்கதை.

 

பலம் . . .

 

+ சிவகார்த்திகேயன் & ஃபஹத் பாசில் : இவங்க ரெண்டுபேரோட தோல்கள்ல தான் மொத்த படமும் பயணம் பண்ணுதுன்னு சொல்லலாம். சிவகார்த்திகேயன் முழு நீல வசனம், Fight, Dance’ன்னு பட்டைய கிளப்பி இருக்காரு. ஃபஹத், ஒரு மென்மையான வில்லனா வர்றாரு, இவங்க ரெண்டுபேரு மத்தியில நடக்குற எலி-பூனை காட்சிகள் நன்று.

 

+ வசனங்கள் & கருத்துக்கள் :  படத்துல வர்ற வசனங்கள் எல்லாமே தூள், படத்துல சொல்லப்பட்ட சமூக கருத்துக்களை வசனகர்த்தா சுபா சகோதரர்கள் ரொம்பவே அழகா வசனங்கள் மூலமா பிரதிபளிச்சி இருக்காங்க. சொல்லவந்த சமூக கருத்துக்கள் அனைத்தும் மக்கள் எளிதா தொடர்பு படுத்த முண்டிஞ்ச அளவுக்கு இருந்தது.

 

+ ஒளிப்பதிவு & இசை : அனிருதோட பின்னணி இசையும் பாடல்களும் நன்று. பாடல்கள் படமாக்கிய விதம் கண்களுக்கு குளுமை. முதல் 3 நிமிஷ ஒரு ஷாட் காட்சி, குப்பத்தை மொத்தமா காட்டுற Drone ஷாட்கள் என்று பல இடங்களில் பளிச்சுனு தெரியுறாரு ஒளிப்பதிவாளர் ராம்ஜி.

 

+ முதல்பாதி : சராசரியா கடக்குற முதல்பாதி, படத்துக்கு மற்றொரு பலம். முதல் 30 நிமிடங்கள் மனதுக்கு போடாம போக. அடுத்து 30 நிமிஷம் MBA படிச்சி கூட தெரிஞ்சிக்க முடையாத பல விஷயங்களை நமக்கு எளிமையா சொல்லித்தர, interval’ல ஒரு பெரிய கேள்வியோட நம்மள விடுறாங்க.

 

பலவீனம் . . .

 

– இரண்டாம்பாதி : நீளமா கடக்குற இரண்டாம்பாதி இந்த படத்துக்கு மிகப்பெரிய பலவீனம். இரண்டாம்பதியோட நடுப்பகுதியில, வசனங்கள் மேலோங்கி காணப்படுறதால, ஒலிச்சித்திரம் மாதிரியான உணர்வை தான் தருது. பல கருத்துக்களை திணிச்சதால ஒரு கட்டத்துல திரைக்கதை நகரவே இல்லாம உக்காந்துடுது.

 

– உதிரி கதாபாத்திரங்கள் : சிவகார்த்திகேயன், ஃபஹத் பாசில் இவங்க இரண்டு பேரோட கதாபாத்திரங்களை தவிர, மத்த எல்லா கதாபாத்திரங்களிலும் ஆழமில்லை. விஜய்வசந்த், ரோகினி, சினேகா ஆகியோர் கொடுத்த பாத்திரத்தை செம்மைப்படுத்தி இருந்தார்கள். RJபாலாஜி, சதிஷ், ரோபோசங்கர், பிரகாஷ்ராஜ் எல்லாரும் வந்து போய் இருக்காங்க. நயன்தாராவுக்கு வழக்கமான கமற்சியால் ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமே.

 

– லாஜிக் குறைபாடுகள் : இரண்டாம்பாதி Factory காட்சிகள் எல்லாமே 80’ஸ் சாயல். இரண்டாம்பாதில வரிசைகட்டி நின்ன லாஜிக் குறைபாடுகள் எல்லாமே கண்கூட தெரிஞ்சது வருத்தம்.

 

கூடவே, முத்துராஜோட கலை பிரம்மிக்கத்தக்கது, உண்மையான கூவத்த கண்முன்னாடி கொண்டுவந்து நிறுத்தி இருக்காரு.

 

படத்துல சொல்லப்பட்ட கருத்துக்கள் நம்ம காதுல மட்டும் நிக்காம, உளூரை போய் நிறைய கேள்விகளை நம்மிடத்தில் உருவாக்கியதே இப்படத்தின் முதல் வெற்றி. திரைக்கதை அளவில் இடைவேளை புள்ளியிலிருந்து குறைந்துகொண்டே சென்ற படத்தின் வேகம், படம் முடியும் வரை எந்த இடத்திலும் வேகமெடுக்கவில்லை. முதல்பாதியில் வந்த சில சுவாரஸ்யங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, ஒரு முழுநீள படத்தை எடுக்கலாம் என்றபொழுது, இரண்டாம்பாதிக்குமேல் வேறொரு கதையை கையிலெடுத்ததே, வேலைக்காரனின் முதல் சரிவு.

 

#இயக்குனர்_மோகன்ராஜா, Interval’ல எழுப்புற எல்லா கேள்விகளுக்கும்,  இரண்டாம்பாதியில பதில் தேடப்போய் பாதிவழியில சறுக்கி இருக்காருன்னு தோணுது. அவரோட நோக்கம் உயர்ந்ததுன்னு எடுத்துக்கிட்டாலும், அவரு சொல்லவர்ற கருத்துக்களுக்கு அவரே ஒரு வரையறை போட்டுக்குறது நல்லததுன்னு தோணுது.

 

மொத்தத்துல : சீரா ஓடுற முதல்பாதிக்காகவும், கருத்துக்களை நமக்கு கொண்டுசேக்குற விதத்துக்காகவும் ஒரு முறை இந்த படத்தை பாக்கலாம். இரண்டாம் பாதியை இன்னும் மெருகேத்தி இருந்தா, இது ஒரு சிறந்த படக்குன்னு சொல்லி இருக்கலாம்.

 

மதிப்பீடு : 3 / 5 . . .

 

Santhosh AVK

Share