என் ஆளோட செருப்ப காணோம்  – படம் எப்படி ?

என் ஆளோட செருப்ப காணோம் – படம் எப்படி ?

இயக்கம் : KP.ஜெகன்

நடிப்பு : தமிழ்

ஆனந்தி

பாலசரவணன்

யோகிபாபு

லிவிங்ஸ்டன்

 

ஒளிப்பதிவு : சுகசெல்வனின்

படத்தொகுப்பு : மணிகண்டன் சிவகுமார்

இசை : இஷான் தேவ் (பாடல்கள்)

தீபன் சக்கிரவர்த்தி (பின்னணி)

தயாரிப்பு : S. சக்திவேல்

நீளம் : 127 நிமிடங்கள்.

 

கதைச்சுருக்கம் : கல்லூரி மனைவி சந்தியாவின் (ஆனந்தி) செருப்பு தொலைந்துபோக, அதை வாங்கிக்கொடுத்த வெளிநாட்டுவாசியான அவளின் அப்பாவும் அதேநேரத்தில் கடத்தப்பட, அவளின் செருப்பு கிடைத்தால் அப்பா திரும்பிவிடுவார் என்று சாமி குறி கூற, தொலைந்த அந்த செருப்பை தேடிச்செல்லும் சந்தியாவின் ஒரு தலை காதலன் கிருஷ்ணன் (தமிழ்) படும் பாட்டை உரைக்கிறது திரைக்கதை.

 

அறிமுக பாடல் கடந்ததும் கதை சூடுபிடிக்க துவங்க, அங்கங்கே செயக்கைத்தனம் தென்பட்டாலும் நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை, இடைவேளை கடந்தும் நம்மை சுவாரஸ்யப்படுத்த, கடைசீ 20 நிமிட காட்சிகளில் நம்மை சோதித்து பின் நாம் எதிர்பார்த்த முடிவை தந்து முடிகிறது படம்.

 

பலம் …

 

+ திரைக்கதை : படத்தின் தலைப்பிற்கேற்ப, கதையும் முதலில் கேட்க அந்நியமாக தெரிந்தாலும், இப்படத்தின் திரைக்கதை நம்மை மெதுவாக வசீகரிக்க துவங்குகிறது. கடைசீ 20 நிமிடங்களை தவிர்த்து பார்த்தல், இத்திரைக்கதையே இப்படத்தின் ஆணிவேர் எனலாம்.

 

+ கதாபாத்திரங்கள் : படம் முழுக்க உலாவும் யோகிபாபு துவங்கி, ஓரிரு காட்சிகளே வரும் பாலசரவணன், லிவிங்ஸ்டன், KS. ரவிக்குமார் கதாபாத்திரங்கள் வரை, படத்தின் தோன்றும் அணைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றது. எல்லா கதாபாத்திரங்களுக்கும் Closing கொடுத்த விதமும் சிறப்பு.

 

+ காமெடி காட்சிகள் : படம் முழுக்க தூவப்பட்டிருக்கும் காமெடி காட்சிகள் பெருமளவு கைகொடுத்திருப்பது சிறப்பு. யோகிபாபுவின் கவுண்டர்களுக்கு ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள்.

 

பலவீனம் . . .

 

– இரண்டாம்பாதி : கதை முடிந்தும் கிளைமாக்ஸிற்காக நீளும் இரண்டாம்பாதி கடைசீ 20 நிமிட காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கின்றது.

 

– இசை : பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம், பின்னணி இசையில் பெருமளவு பல சூப்பர்ஹிட் படங்களின் பாதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.

 

ஹீரோ மழையில் அழும் இடைவேளை காட்சி,லிவிங்ஸ்டன் வேவுபார்க்கும் காட்சி என, பல காட்சிகளின் நீளம் சிறிது நெருடுகிறது, படத்தொகுப்பாளர் மணிகண்டன் இவற்றை சரிசெய்து இருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் நம்மை ஒன்ற வைத்தாலும், ஓரிரு இடங்களில் படத்தின் பட்ஜெட் ஒரு குறையாக திரையில் பிரதிபலிக்கின்றது, ஒளிப்பதிவாளர் சுகசெல்வனின் பணி நன்று. ஹீரோ தமிழ், ஹீரோயின் அஞ்சலி இருவரும் கச்சிதம். 20 நிமிடங்கள் நம்மை காக்கவைத்து வரும் கிளைமாக்ஸ், ரசனை. ஒரு மெல்லிய கதையை சரியான திரைக்கதையின் மீது அமர்த்தி நகர்த்திய விதத்திலேயே நம் பாராட்டுகளை அள்ளுகிறார் இயக்குனர் KP.ஜெகன்.

 

மொத்தத்தில் : இரண்டாம் பாதியில் கடைசி பகுதிகளில் ஏற்படும் தோய்வுகளை நீக்கிவிட்டு பார்த்தால், இப்படத்தை ஒரு முறை பார்க்க வல்லது.

மதிப்பீடு : 2.5 / 5 . . .

Share