ஸ்பைடர்  – படம் எப்படி ?

ஸ்பைடர் – படம் எப்படி ?

இயக்கம் : எ.ஆர்.முருகதாஸ்

நடிப்பு : மகேஷ் பாபு

                 ராகுல் ப்ரீத் சிங்க்

                 SJ.சூர்யா

                 RJ பாலாஜி

                 ஜெயப்ரகாஷ்

                 தீபா ராமானுஜம்

ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்

படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு : NVR சினிமாஸ்

நீளம் : 146 நிமிடங்கள்

 

அதீத சமூகவெறுப்பினால் தொடர்கொலைகளை அரங்கேற்றி வரும் குற்றவாளியை, சமூக அக்கறை கொண்ட ஹீரோ வதம்செய்யும் வழக்கமான பூனை-எலி விளையாட்டே இந்த ஸ்பைடர்.

 

கதைச்சுருக்கம் : மத்திய உளவுத்துறையில் பொதுமக்களின் செல்பேசி அழைப்புகளை ஒட்டுகேற்கும் பிரிவில் பணிபுரியும் சிவா, சில சந்தேகத்திற்குரிய அழைப்புகளை பின்தொடர, அது ஒரு தொடர் கொலையாளியிடம் போய் முடிகிறது. பின்னர் வரும் சம்பவங்களின் கோர்வையே திரைக்கதை.

 

சுமார் 146 நிமிடங்கள் ஓடும் இப்படம், முதல் 45 நிமிடங்கள் ஹீரோ builtup மற்றும் ஹீரோயின் காதல் காட்சிகளுக்கு வழிவிட்டு நிற்க, இடைவேளைக்கு முன் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் சூடுபிடிக்க, இடைவேலைக்காட்சியில் பாற்றியெரிகிறது திரை. லாஜிக் மீறல்கள் அதிகம் தென்படும் இரண்டாம்பாதியின் பெரும்பான்மையான காட்சிகள் விறுவிறுப்பாக சென்றுவிட,சுமாரான கிளைமாக்ஸ் காட்சியுடன் முடிகிறது படம்.

 

பலம் . . .

 

+ SJ.சூர்யா :

*இடைவேளைக்கு சற்று முன்னரே தோன்றினாலும், இவரது நடிப்பு நம்மை உடனடியாக வசீகரிக்கிறது. SDP என்னும் மனநிலை கோளாறு உள்ள சுடலை கதாபாத்தில் தோன்றும் இவரது நடிப்பு, சற்று மிகையானது என்றாலும், இவரின் வழக்கமான உடல்மொழியில் கலந்துகட்டி நம்மை நம்பவைத்து விடுகிறார்.

 

+ ஒளிப்பதிவு :

* ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு மஞ்சள் நிறத்தின் மேலுள்ள காதல், இப்படத்திலும் அநேக இராவுக்காட்சிகளில் தென்படுகிறது. முதல் பாதி Roller coaster காட்சியிலும், இரண்டாம்பாதி பெரிய பாறை உருளும் காட்சியிலும், கிளைமாக்ஸ் மருத்துவமனை காட்சியிலும் இவரின் பங்களிப்பு அலாதி.

 

+ கலை :

*ஃப்ளாஷ்பேக் சுடுகாடு காட்சிகளும், அதன் கிராமமும், பின்னர் இடிந்த நிலையில் காட்டப்படும் வீடுகளிலும் கலை இயக்குனரின் உழைப்பு வெளிப்படுகிறது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளில் இவருக்கு அதீத பங்கு உண்டு, கிராபிக்ஸ் கை கொடுக்காததால் திரையில் மிளிரவில்லை.

 

பலவீனம் . . .

 

காதல் காட்சிகள் :

* காதல் காட்சிகள் அனைத்தும், கதைகளைத்தை விட்டு தள்ளியே நிற்கின்றது. வழக்கமான அப்பாவி ஹீரோயின் கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங்.

 

இசை :

* பாடல்கள் அனைத்தும் சுமார் ராம், அதிலும் Placement’படு சொதப்பல். பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜின் முந்தைய படங்களின் சாயல். இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளை தவிர்த்து, மற்ற இடங்களில் வரும் பின்னணி இசை, படத்திற்கு ஒட்டவில்லை.

 

கிராபிக்ஸ் :

*படம் நெடுக கிராபிக்ஸ், பெருமளவு கார்ட்டூன் தரத்திலேயே தென்பட்டது. Roller coaster காட்சி, எதார்த்தத்தை மீறிய சொதப்பல். கிளைமாக்ஸ் காட்சி சிறிது தத்ரூபமாக வந்திருந்தாலும், படத்திற்கு பெரிதும் உதவி இருக்கும். பாறை காட்சி, நம்பமுடியாதவை.

 

மகேஷ் பாபு தமிழுக்கு புதுமுகம் என்பதால், அவரின் உடல்மொழி முதலில் உறுத்தலாக தென்பட்டாலும், பின்னர் வரும் காட்சிகளில் சரியாகிவிடுகிறது. ஜெயப்ரகாஷ், தீபா ராமானுஜம், RJ பாலாஜி தொடங்கி, படத்தில் பல பரிச்சயமான முகங்கள், ஆனால் யார் கதாபாத்திரமும் மனதில் தங்குவதில்லை. இரண்டு காட்சிகள் மட்டும் வரும் பரத், பரிதாபமாக இறக்கிறார்.

 

ஹீரோ intro தொடங்கி, படத்தில் பல காட்சிகள் துண்டு துண்டாக நகர்வது செயற்கை, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாதின் இவற்றை கவனித்து இருக்கலாம். இடைவேளையில் பெரிதாக நம்பிக்கை கொடுக்கும் திரைக்கதை, இரண்டாம்பாதியில் விறு விறுவென நகர்ந்தாலும், அதீத லாஜிக் மீறல்கள் நம்மை அவ்வப்பொழுது அந்நியப்படுத்துவதை தவிர்க்கமுடிவதில்லை. குடும்பப்பெண்கள் ஒன்றாக கூட்டி செயல்படுத்தும் போலீஸ் திட்டம் உட்பட பல இடங்களில் முருகதாஸ் டச் தெரிந்தாலும், பெண்கள் சொதப்பும் இடங்களில்  வாகனத்தில் உட்கார்ந்தபடி ஹீரோ கொடுக்கும் முகபாவனைகள் அனைத்தும் பாதாள லாஜிக் ஓட்டைகள். திரைக்கதையிலும், படமாக்களிலும் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

 

மொத்தத்தில் : அதீத லாஜிக் ஓட்டைகளும், ஒட்டாத காதல் காட்சிகளும் உங்களை பாதிக்காது எனில், இந்த ஸ்பைடர் உங்களை மகிழ்விக்க வல்லது.

 

RATING : 2.75 / 5 . . .

Share