வேலையில்லா பட்டதாரி 2 – படம் எப்படி ?

வேலையில்லா பட்டதாரி 2 – படம் எப்படி ?

திரைக்கதை – இயக்கம் : சௌந்தர்யா ரஜினிகாந்த்
கதை – வசனம் : தனுஷ்
நடிப்பு : தனுஷ்
                 கஜோல்
                 அமலாபால்
                 சமுத்திரக்கனி
                 ரீத்து வர்மா
                 சரண்யா பொன்வண்ணன்.
ஒளிப்பதிவு : சமீர் தாஹிர்
படத்தொகுப்பு : பிரசன்ன GK
இசை : சீன் ரோல்டன்
பின்னணி இசை : சீன் ரோல்டன் & அனிருத் (முகப்பு இசை)
தயாரிப்பு : தனுஷ் & ‘கலைப்புலி’ S தாணு.
‘நிற்க அதற்குத் தக’
இந்த வாக்கியம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, #தனுஷ்’ஷுக்கு ரொம்பவே பொருந்தும். ‘சுமாரா ஒரு படம் எடுக்கப்போய் super hit ஆகிடுச்சு, இப்போ அத விட சுமாரா ஒரு squeal எடுப்போம்’ன்னு சொல்லிவெச்சி எடுத்தமாதிரியே வந்திருக்கு #VIP2.
கதைச்சுருக்கம் :
கல்யாணமான ரகுவரன், இருக்குறவேளை போய், மறுபடியும் எப்படி VIP ஆகுறாரு, எதிரிகளை ஊடுகாட்டி எப்படி அடிக்குறாருன்னு திகட்ட திகட்ட சொல்லி இருக்குற படம் தான் வேலையில்லா பட்டதாரி பக்கம் 2.
பார்ட் 1 காட்சிகள், சென்டிமென்டுகள், fight’கள், காமெடின்னு மொத்தமே ஒரு செயற்கையான ரீமேக் Tone’ல தான் மொத்த படமுமே பயணம் பண்ணுது, இடையிடையே நல்ல காட்சிகள் தென்பட்டாலும், பின்னர் வரும் நீளமான காட்சிகளும், வசனங்களும், ஒரு வகை சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.
பலம் . . .
+ ஒளிப்பதிவு: படம் முழுக்க பளிச்சுன்னு தெரியிறது #சமீர்’ரோட கேமரா தான். slow motion காட்சிகளிலும்,Built-up காட்சிகளிலும் கவனிக்கவைக்கிறார்.
+ தனுஷ் : ஒன்றாம் பாகம் போல, இதிலும் படத்தை தூக்கி தோளில் சுமக்கிறார் தனுஷ். வழக்கமாக நடிப்பில் தெரியும் ரஜினி சாயலோடு கைகோர்த்து, காதல்காட்சிகளில் சிறிது கார்த்திக்கும் எட்டிப்பார்க்கிறார்கள்.
+ வசனம் : காட்சிகளுக்கேற்ப இடை இடையே வரும் திருக்குறள், சமுத்திரக்கனி பேசும் முதிர்ந்த வசனங்கள், தனியே நின்றாலும் ஆங்காகே ஹீரோ பேசும் நீளமான பஞ்ச் என்று அங்கங்கே கைதட்ட வைக்கிறார் வசனகர்த்தா தனுஷ்.
பலவீனம் . . .
– திரைக்கதை : சீராக சென்றாலும், ஆதித்யா டிவி பாக்குறபோது திடீர்ன்னு current-cut ஆனமாதிரி, கொஞ்சம்கூட பாதிப்பே இல்லாம வந்துடுது interval. பின்னாடியே வர்ற இரண்டாம்பாதி, சில இடத்துல சோதிக்கவும், சில இடத்துல சிரிக்கவும், பலநேரங்கள்ல உச்சிக்கொட்டவும் வெச்சிடுது. அதுக்கு முழுமுதல் காரணம் Engineering’ஓட  அடிப்படைய கூட முழுசா தெரிஞ்சிக்காம எழுதப்பட்ட காட்சிகளே!!..
– கஜோல் : மந்திரிகள் seiren’அ கழட்டிவெச்சிட்டு சிங்கள் வண்டியில வளம் வர்ற இந்தகாலத்துல, எங்கபோனாலும் 3 கார் பந்தோபஸ்த்தோட வர்றது, பண்ணையார் தோணியில கொட பிடிக்க கோர்ட்-சூட்’டோட கூடவே ஒருதான் சுத்துறது’ன்னு  ரொம்பவே செயற்கையா சித்தரிச்சதாலேயே #வசுந்தரா (எ) #கஜோல் வர்ற காட்சிகள் அத்தனையும் அவங்களோட Make-Up கணக்கா ஒட்டாமயே இருக்கு
– இசை : சீன்_ரோல்டன்’னோட இசை இந்த படத்துக்கு எந்த விதத்துலயும் உதவுல, பாடல்கள் எல்லாமே ரசிகர்களுக்கு ‘Dum டைம்’. BGM’ல பாதி #அனிருத்’தே வந்துடறதால, இவரோட பின்னணி இசை எடுபடவே இல்லை.
படத்துல பெரிய ஆறுதல், சமுத்திரக்கனி’யோட முதிர்ந்த நடிப்பும் வசனங்களும். சண்டைக்கார பொண்டாட்டியா #அமலாபால், முதல்பாதியில் மட்டும் ஸ்கோர் பண்றங்க. விவேக்கும் தங்கபுஷ்பமும் படத்துக்கு extra-luggage தான்.
ஒரு சின்ன lead கூட இல்லாம திடீர் திடீர்ன்னு வர்ற பாட்டு, fight’டையெல்லாம் பாத்தாலே, இயக்குனர்  சௌந்தர்யா ரஜினிகாந்த்’க்கு Audience pulse மேல இருக்குற புரிதல் வெளிப்படையா தெரியுது. எந்த ஒரு high point’டும் இல்லாம, தேமேன்னு போகுற போக்கிலேயே படம் பாதி தோத்துடுது. கிளைமாக்ஸ்ல தனுஷும், காஜலும்  பெருசா மோதிக்குவாங்க’ன்னு எதிர்பாக்கும்போது, பட்டிமன்றம் பாணியிலே உக்காந்து பேசியே படத்த முடிக்குறதெல்லாம் சோதனை மேல் சோதனை.
மொத்தத்துல : ஒரு நல்ல டீம், ஒண்ணா சேந்து, எந்த ஒரு பாதிப்பும் தராத ஒரு சுமாரான squeal’அ கொடுத்து இருக்காங்க.
#RATING : 2 / 5 . . .

Santhosh AVK

Share