தரமணி – படம் எப்படி ?

தரமணி – படம் எப்படி ?

இயக்கம் : ராம்

நடிப்பு  : ஆண்ட்ரியா

வசந்த் ரவி

அஞ்சலி

அழகன் பெருமாள்

இசை : யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்

படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு : Catamaran Productions.

 

வாழ்க்கையைத் தொலைத்த, பணபஞ்சமில்லாத ஒரு IT பெண்ணுக்கும், காதலைத் தொலைத்த, முகவரி இல்லாத ஒரு தாடிப்பையனுக்கும் ஏற்படும் காதல் தேடல்களே இந்த #தரமணி.

இருட்டரங்கில் அரங்கேறும் பல சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் ராம், இந்த படத்திலும் அவரது முத்திரையை பாதிக்க தவறவில்லை. காதல் ததும்ப காணப்படும் முதல் 30 நிமிட காட்சிகள் நம் கண்ணை கவர, அடுத்தடுத்து அரங்கேறும் சந்தேகக்காட்சிகள் நம்மை இடைவேளைக்கு முன்னரே சோர்வடையச்செய்கின்றன. இடைவேளைக்குப்பின் திசைமாறி, ‘கற்றது தமிழ்’ பாணியில் செல்லும் திரைக்கதை, ஒருவழியாக கதைக்களத்தோடு இணைக்கப்பட இனிதே இழுத்தடித்து முடிக்கப்படுகிறது இப்படம்.

 

பலம் …

+ ஒளிப்பதிவு : தரமணியில் அழகை பிரதிபலிக்கும் #தேனி_ஈஸ்வரின் ஒளிப்பதிவு நச். புறாவை பின்பற்றும் Top Angle shot’ட்டுக்காகவே ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து.

 

+ வசனம் : விவசாயம், ஏரிகளை ஆக்ரமித்தல், மீனவர்கள் பிரச்சனை உட்பட பல நுணக்கமான விஷயங்களை வசனங்கள் மூலம் திரைக்கதையில் கோர்த்த விதத்தை பாராட்டலாம்.ராமின் Voiceover வசனங்கள் பல, படத்தின் ஓட்டைகளை அடைக்க பயன்பட்டிருக்கிறது.

 

+ பின்னணி இசை :  Title Card BGM  தொடங்கி பல இடங்களில் பின்னணி இசை மூலம் அசரவைக்கிறார் யுவன், பாடல்கள் பரவாயில்லை ரகம்.

 

+ ஆண்ட்ரியா : 5 வயது குழந்தையின் தாயாக ஆண்ட்ரியா, நடிப்பிலும் அதே முதிர்ச்சி. இடைவெளி காட்சியில் காதலனுடன் வெடிக்கும்போதும், இரண்டாம்பாதியில் தனது பாஸ்’சை பழிவாங்கும் இடத்திலும், அசத்தல்.

 

பலவீனம் . . .

 

– ஹீரோ : ராமை திரையில் பார்க்காத குறையை போக்கிவிடுகிறார் ஹீரோ #வசந்த்_ரவி, கண் அசைவுகள் உட்பட அனைத்திலும் ராமின் சாயல், சில சமயம் எரிச்சல்.

 

– இரண்டாம்பாதி : மெதுவாக சென்றாலும், தெளிவாக செல்லும் முதல்பாதி திரைக்கதையை, தேவையில்லாமல் குழப்பி பஞ்சாமிரதம் ஆக்கி இருக்கிறது இரண்டாம்பாதி. நீளமான இரண்டாம்பாதி காட்சிகளை சிறிது நறுக்கி இருக்கலாம்.

 

– ராமின் சாயல்கள் : தேவையில்லாமல் சாகும் போலீஸ்காரர் மனைவி, இடைவேளைக்கு முன் வேண்டுமென்றே சந்தேகப்படும் ஹீரோ, இடையிடையே எட்டிப்பார்க்கும் அந்தரங்க விஷயங்கள்  உட்பட ராமின் திணிப்புக்கள் சலிப்படைய வைக்கிறது.

 

திரையில் நாம் காணும் காதல் பார்வை அல்லாமல், திரைமறைவில் காணப்படும் சமூகப்பார்வையும், அதில் தேன்தொட்டு பகிரும் ராம்’மின் குரலுமே இதை ராமின் தரமணி என்று பல இடங்களில் நமக்கு உணர்த்துகிறது. படம் முழுக்க உலாவும் ஜோடிப்புறாவும், பறக்கும் ரயிலும் கணக்கில்லாமல் கவிபாடுகிறது. இறுதிவரை அமைதிகாக்கும் அழகம் பெருமாள், தன் மனைவியின் நிலையை  சொல்லி அழும் இறுதிக்காட்சியில் கவனிக்க வைக்கிறார். IT பெண்களின் மனமாற்றத்தை பிரதிபலிக்கும் அஞ்சலி கதாபாத்திரம், நன்று.

 

ஆண்ட்ரியா தன் Boss’சின் மூக்கை உடைத்தும் முடிவடையும் கதையை, கற்றது தமிழ் பாணியில் ஓடத்துவங்க உச்சிக்கொட்டுகிறார்கள் ரசிகர்கள். இருந்தும், cliché காட்சிகளை வசனம் மூலம் தவிர்த்தது, ஒரே Shot’டில் எடுக்கப்பட்ட interval காட்சி, இறுதியில் வரும் இஸ்லாமியர் கூறும் வசனம் என்று மனதைத்தொடுகிறது சில இடங்கள்.

 

#மொத்தத்தில் : இழுவையான காட்சிகள், சுமாரான இரண்டாம்பாதியை நீங்கள் பொறுத்துக்கொண்டால்,  சிறிது வித்யாசமாக காட்சியளிக்கும் இந்த #தரமணி.

#RATING : 2.75 / 5 . . .

Santhosh AVK

Share