இந்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் ‘அண்டாவ காணோம்’ இடம் பிடிக்கும் – J.சதிஷ்குமார்

இந்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் ‘அண்டாவ காணோம்’ இடம் பிடிக்கும் – J.சதிஷ்குமார்

ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ராஜ்குமார் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’.

ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்காற்றி இருக்கும் இந்த படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அத்தோடு ஜே.எஸ்.கே. ஃபிலிம்ஸ் 10-ம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினர்.

jsk-1

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “என் சினிமா கேரியரில் தெரிந்தோ, தெரியாமலோ ஆரம்பத்தில் இருந்தே சதீஷ்குமாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அவர் மாதிரி ஒரு படத்தை கொண்டு சேர்ப்பது என்பது யாராலும் முடியாது. தேசிய விருதுக்கு படங்களை அனுப்பி, அவற்றிற்கான அங்கீகாரத்தை பெற்றுத் தருவது என்பது அவரால் மட்டும்தான் முடியும். அவரை பின்பற்றித்தான் ‘தர்மதுரை’ படத்துக்கு தேசிய விருது பெற்றோம். எதிர் அணியில் நான் இருந்தால்கூட என் நலனுக்காக யோசிப்பவர்தான் சதீஷ்குமார்…” என்றார்.

இயக்குநர் யுரேகா பேசும்போது, “சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தை எடுத்தேன். அதை தணிக்கை குழுவில்கூட வரவேற்கவில்லை. அந்த நேரத்தில் மிகவும் தைரியமாக அந்த படத்தை வாங்கி வெளியிட்டார் சதீஷ்குமார். பணத்துக்காக அந்த படத்தை வெளியிடவில்லை, நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்றுதான் வெளியிட்டார். நல்ல சினிமா கொடுக்க தமிழ் சினிமாவில் அவர் போல சிலர்தான் இருக்கிறார்கள், அவர் தொடர்ந்து படம் தயாரித்துல் கொண்டே இருக்க வேண்டும்…” என்றார்.

sriya

நடிகரும், இயக்குநருமான மனோபாலா பேசும்போது, “ஸ்ரேயா ரெட்டியை தமிழ் சினிமாவின் ஸ்மிதா பட்டீல், ஷபனா ஆஸ்மி என சொல்லலாம். இந்த மாதிரி படங்களை தைரியத்தோடு  எடுக்க  சதீஷ்குமாரால்தான் முடியும். யார் அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது என்ற போட்டி அவருக்கும் எனக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும் அதில் எனக்கு முன்னால் சென்று கொண்டேயிருக்கிறார் சதிஷ்…” என்றார்.

இயக்குநர் பாலகிருஷ்ணன் பேசும்போது, “ஜே.எஸ்.கே. சாரின் கணிப்பு எப்போதும் தவறியதேயில்லை. ‘ரம்மி’ படத்தில் இடம் பெற்ற ‘கூட மேல கூட வச்சி’ பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகும் என அப்போதே சொன்னார். அது நடந்தது. சினிமா தெரிந்த ஒரு தயாரிப்பாளர் அவர்..” என்றார்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், “நடுவுல கொஞ்சம் பக்க

த்த காணோம்’ படத்தை நிறைய பேர் பார்த்தார்கள், நிறைய காட்சிகளை கட் செய்ய சொன்னார்கள். யாரும் படத்தை வாங்கவில்லை. படத்தை பார்த்த சதிஷ்குமார் சார் கட் எதுவும் செய்ய தேவையில்லை, அப்படியே ரிலீஸ் செய்யலாம்னு சொன்னார். அதோடு பொய்யாக 20 நிமிடம் கட் செய்து விட்டோம் என சொல்லித்தான் படத்தை ரிலீஸ் செய்தார். அது சரியான விதத்தில் மக்களை சென்றடைந்தது. ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பது ஒரு இயக்குநருக்கு எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்பது இயக்குனர்களுக்கு மட்டுமே தெரியும்…” என உணர்வுப்பூர்வமாக பேசி விட்டு போனார்.

படத்தின் ஹீரோயினான ஸ்ரேயா ரெட்டி பேசுகையில், “9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம் இது. இயக்குநர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ‘திமிரு அளவுக்கு இருக்குமா..?’ எனக் கேட்டேன்.  இயக்குநர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு பத்தி பேசாதீங்க.. இது உங்களோட மிகச் சிறந்த படமாக இருக்கும்’னு சொன்னார். ‘நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம். நேரா ஷூட்டிங்க்கு வாங்க’ன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லி கொடுத்தார். ஜே.எஸ்.கே. இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது…” என்றார்.

இயக்குநர் ராம் பேசுகையில், “எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டை வைத்தும் படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்தும் படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது மிகப் பெரிய சாதனை. அந்த வகையில் ஜே.எஸ்.கே. மிகப் பெரிய சாதனையை செய்திருக்கிறார்.

raam-1

ஒரு படத்தை எடுத்துவிட்டு ரிலீஸுக்கு காத்திருக்கும் இயக்குநர்களுக்கு அதன் தயாரிப்பாளரோடு முரண் நிச்சயம் இருக்கும். ஆனாலும் ஜே.எஸ்.கே. சதீஷ்குமாருடன் அந்த முரண் நிச்சயம் எங்களில் யாருக்குமே இருக்காது. என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக சொல்லி நம்மை சமாதானப்படுத்திவிடுவார்.

நான் இயக்கியிருக்கும் ‘தரமணி’ படத்துக்கு 14 கட்டுகளை கொடுத்து ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுக்க முன் வந்தனர் தணிக்கை குழுவினர். ஆனால் ஒரு கூட இல்லாமல் ‘ஏ’ சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்தார் சதீஷ். அவரை போல ஒரு தயாரிப்பாளரை பார்க்கவே முடியாது. அண்டாவுக்கு பல உள் அர்த்தங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்..” என்றார்.

“அண்டாவ காணோம்’ படத்தின் இயக்குநர் வேல்மதி ஒரு கிராமத்தில் இருக்கும் 300 பேரை நடிக்க வைத்து எடுக்கப் போகிறேன் என சொன்னார். அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார் இயக்குநர். இந்த மாதிரி ஒரு கதை என்று சொன்னவுடன் முதலில் நாங்கள் நடிக்க கேட்டுப் போனது ஸ்ரேயா ரெட்டியை தான். என் கணிப்பு சரியாக இருக்கும்பட்சத்தில் இந்த ஆண்டு நிச்சயம் தேசிய விருது பட்டியலில் இந்த ‘அண்டாவ காணோம்’ இடம் பிடிக்கும்.

இயக்குநர் ராமின் தரமணி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும். தலயோட சேர்ந்து நாங்களும் கெத்தா வரோம்…” என்றார் தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார்.

இந்த விழாவில் இயக்குநர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கார்த்திக் ரிஷி, ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் வெங்கட் சுபா, ஜாஸ் சினிமாஸ் கண்ணன், தயாரிப்பாளர் லியோ விஷன் ராஜ்குமார், ஆல்பர்ட், நடிகர் இளையராஜா, வினோத், நடிகை நவீனா, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பாடலாசிரியர் மதுரகவி, இயக்குனர் வேல்மதி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்.

Share