ரங்கூன் – படம் எப்படி ?

ரங்கூன் – படம் எப்படி ?

கதை :
பர்மாவின் பழைய பேரான ரங்கூனில் பிறந்து வளரும் கவுதம் கார்த்திக்,  சென்னையில் இருக்கும் அப்பாவுக்கு வேலை கிடைத்ததால் தனது அம்மாவோடு சென்னை வருகிறார். சென்னையில் வளரும் கௌதம்க்கு இரு நெருங்கிய நண்பர்கள். அதில் ஒருவர் மூலம் அடகு கடை நடத்திவரும் சியான் அறிமுகம் கிடைக்க, அவருடைய கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள் மூவரும்.
நாட்கள் செல்ல செல்ல, கவுதமின் துடிப்பும் வேலைத்திறமையும் சியானுக்கு பிடித்துப் போகிறது. சங்கத்து பிரச்சனையால் உயிருக்கு ஆபத்து வரும்போதும் அவரை கௌதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீது சித்திக் வைத்திருந்த அபிமானம் மேலும் அதிகமாகிறது. தன் பணக்கஷ்டம் பற்றிய உண்மையை சொல்லி தங்க கடத்தல் மூலம் மொத்த கடனையும் அடைத்துவிட உதவி கோறுகிறார். கௌதமும் சம்மதிக்கிறார்.
சியானின் மகளுக்கு உதவ ஒரு சண்டையில்  நாயகி சானா அறிமுகம் கிடைக்கிறது. அதன் மூலம் இருவருக்கும் காதல் அறிமுகமாகிறது.
ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தொடங்கும் தங்க கடத்தல் இவர்களின் திறமையால் வளரத்தொடங்குகிறது. ஒருகட்டத்தில் போலீஸின் கெடுபிடி அதிகமாகிவிட கடைசியாக ஒரு பெரிய டீல் முடித்து தரசொல்லி சியான் கௌதம் பிறந்த ஊரான ரங்கூனுக்கே அனுப்புகிறார்.
ரங்கூன் செல்லும் கௌதமும் அவர் நண்பர்களும் தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை கொண்டுவரும்போது தொலைந்து போகிறது.
பணம் காணாமல் போனதால் மூவரும் செய்வதறியாது திகைக்கிறார்கள்.  கடைசியில் அவர்களுக்கு தொலைத்த பணம் கிடைத்ததா ? பணத்தை திருடியவர்கள் யார் ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நிறை :
கவுதம் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை முடிந்த அளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக வரும் டேனி, லல்லு இருவரும் இணையான நடிப்பு.
நாயகி சானாவுக்கு அறிமுக படமாக இருந்தாலும், தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார். அடகு கடை அதிபராக வரும் மலையாள நடிகர் சித்திக் அனுபவ நடிப்பு.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தங்க கடத்தல் பின்னணியில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இளைஞர்களின் வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார். படத்திற்காக இவர் தேர்வு செய்த லொக்கேஷன்கள் மிக அழகாக இருக்கிறது. படத்தில் அனைத்து பிரிவிலும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் பார்க்கும்போதே தெரிகிறது.
அனிஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் ரங்கூனை மிக அழகு.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. விக்ரமின் இசையில் பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது.
குறைகள் பற்றி அலசினால் படத்தின் மிகப்பெரிய ரகசிய முடிச்சு அவிழ்ந்துவிடும்.
மொத்தத்தில் ‘ரங்கூன்’ ரசிக்கலாம்.

மதிப்பீடு 2.75/5

Share