அனைத்து மொழிகளிலும் பயணம் செய்யும் – யாத்ரீகா
இயக்குநராக வேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ள நிகிதா என்பவரின் மூளையில் உதயமானதே யாத்ரீகா. விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவியான இவர் இந்தத் திட்டத்தில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வருகிறார். நிகிதா இயக்குனராக அறிமுகமாகும் “யாத்ரீகா” வீடியோ அவரது லட்சித்திற்கான கதவுகளைத் திறக்கும்.
யாத்ரீகாவாக நடித்திருக்கும் வைஷாலி தனது நடிப்புப் பயணத்தை இந்த இசை ஆல்பத்தின் மூலம் துவக்கியுள்ளார். இயற்க்கையாகவே தனது நடிப்பில் தெளிவையும் நளினத்தையும் காட்டி நிகிதாவின் கற்பனையை நிஜமாக்கியுள்ளார் வைஷாலி.
இந்த வீடியோவின் ஒளிப்பதிவாளர் திரு.ஸ்ரீராம் ராகவன். இது இவரது 3-வது இசை ஆல்பமாகும். ஸ்ரீராம், பல்வேறு விளம்பரங்கல் மற்றும் கார்ப்பரேட் புராஜெக்ட்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றித் திறமையை நிரூபித்தவர். மேலும் பல படங்களில் ஒளிப்பதிவு இயக்குனர்களின் அசோசியேட்டாகப் பணிபுரிந்தவர். இந்த ஆல்பத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அவரது திறமைகளைப் பேசும். இந்தப் பயணத்தின் தனிச்சிறப்பான கோணங்களை, கடினமான இந்தப் பயணத்தில் படம் பிடித்துள்ளது அவரது கேமரா. சிக்மகளூர் மலைப்பகுதிகளில் இண்டு இடுக்கெல்லாம் பயணம் செய்து இந்த வீடியோ ஆல்பம் சிறப்பாக வெளிவர படம்பிடிக்கப்பட்டுள்ளது.
அல்-ருஃபியான் இசையமைப்பாளராய்ப் பணியாற்றியுள்ளார். இவரது இசை “பயணம்” எனும் வடிவத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. இந்த இசை அனைத்து மொழிகளிலும் பயணம் செய்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த இசை ஆல்பம் தயாராகிறது. ஒவ்வொரு மொழியிலும் பாடல்கள் அதற்கென்றே எழுதப்பட்டுப் பல்வேறு கலைஞர்களால் பாடப்பட்டுள்ளது.
தமிழில் யுகபாரதி பாடலை எழுதியுள்ளார், ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்., இதன் ராப் பகுதி லேடி கேஷால் பாடப்பட்டது.
இந்த வீடியோவில் காணப்படும் உணர்வுகளுக்கேற்றவாறு ஆடை வடிவமைப்பு மேற்கொண்டுள்ளார் சியாஸ்ரீ. இந்த ஆல்பத்தின் எடிட்டர் சுபாஸ்கர், இவர் தனது எடிட்டிங் திறமைகளைப் பாடல்களின் தன்மைக்கேற்ப வெளிப்படுத்தியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=uhre_64j7IY
Share
Social