கவண் – படம் எப்படி ?

கவண் – படம் எப்படி ?

தொலைக்காட்சியும் பத்திரிக்கைகளுமே ஒரு நாட்டின் தற்கால வாழ்க்கையை உலகிற்கு பிரதிபலிக்கும் கண்ணாடி… பணம் TRP என அதில் விரிசல் விழுந்தால்..?!?!
கே.வி. ஆனந்தின் ஏற்கனவே இதே கதைக்களத்தில் எடுக்கப்பட்ட “கோ” படத்தின் வெற்றியும், டி.ஆர், விஜய்சேதுபதி கூட்டணியுமாக பெருத்த எதிர்பார்ப்போடு வெளிவந்திருக்கும் படம் “கவண்”
மீடியா மூலம் நாட்டின் பிரச்சனைகளை, உண்மைகளை உரக்க சொல்லவேண்டும் என நினைக்கும் விஜய் சேதுபதி மற்றும் அவரின் காதலி மடோனா “ஜென் ஒன்” தொலைக்காட்சியில் பணிபுரிகின்றனர். போஸ் வெங்கட்டின் தொழிற்சாலை கழிவுக்கு எதிராக போராடியதால் பிரச்சனைக்குள்ளாகும் ஒரு பெண்ணை EXCLUSIVE ஆக பேட்டி எடுக்கின்றனர்.
ஆனால் சேனலின் ஓனர் ஆகாஷ்தீப் காசுக்காகவும், TRP- காகவும் போஸ் வெங்கட் மீதான குற்றங்களை சித்தரித்து மாற்றி வெளியிட வைக்கிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத விஜய் சேதுபதி, மடோனா மற்றும் அவரின் நண்பர்கள் வெளியேற்றப்பட்டு, “முத்தமிழ் டிவி” என்ற ஓடாத தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்திவரும் டி.ஆர்.ருடன் இணைகின்றனர்.
அதன்பிறகு ”ஜென் ஒன்” சேனல் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதா, பாதிக்கப்பட்ட கிராம மக்களின் நிலை மற்றும் போராடிய நபர்கள் மீட்கப்பட்டார்களா என்பதே கதை…
படத்தின் முதுகெலும்பு விஜய் சேதுபதி… ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான ரியாக்சன்கள்.. ப்பா.. நீ நடிகன்யா… “ச்சீ போ…ச்சீ போ…ச்சீ போ” என பூர்ணிமாவை விரட்டும் காட்சி, லைவ் ஷோ காட்சியில் மாறும் ரியாக்சன்கள், மடோனாவின் காதல் எதிர்பார்ப்பு என வேறுலெவல்…
விஜய் சேதுபதிக்கு அடுத்த ஸ்கோப் மடோனாவுக்கும் டி.ஆர்க்கும். மேலும் விக்ராந்த் மற்றும் அவரது தோழியின் நடிப்பு சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுவரை பவர்ஸ்டாரை இவ்வளவு பாசிட்டிவாக யாரும் காட்டியதில்லை… எல்லாரையும் முட்டாளாக நினைக்காதீங்க.. அவனுக்குள்ளயும் எதாச்சும் ஒன்னு இருக்கும் என சொல்லும் இடம் நச்…
ஊடகம் சம்பந்தமான படமென்பதால் வசனங்களுக்கு மிக முக்கியமான ஸ்கோப்… ”கேள்வி முக்கியம்னு நெனைக்கறவன் சத்தமா கேட்பான். பதில்தான் முக்கியம்னு நெனைக்கறவன் மெதுவா கேட்பான்” மற்றும் ”மாற்றம் வேணும்னு நெனச்சா அத மாத்துற உயரத்துக்கு போயிட்டு மாற்றம் கொண்டு வா…”  இவை சில உதாரணங்கள்… நன்றி சுபா, கபிலன் வைரமுத்து.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படத்தின் தரத்திற்க்கு ஏற்ற அளவுகோல். முக்கியமாக லைவ் ஷோவில் அவரின் பங்களிப்பு…
டி.ஆர்.கே கிரணின் கலை, மற்றும் போலீஸ் நடிப்பு என டபுள் செஞ்சுரி… டி.ஆரின் அலுவலகத்தை அல்டிமேட்டாக மாற்றும் காட்சிகள் கண்ணுக்கு விருந்து…
இசையை பற்றி யோசிக்கையில் மலைக்கோட்டை படத்தில் வரும் ஒரு சீன் நினைவுக்கு வருகிறது.. ஊர்வசி சொல்லுவார் “தமிழ்நாடு போலீஸ்தான் உலகத்துலயே நம்பர் 2″ என்று. அதை விஷால் கலாய்ப்பார் ”நீயும் என் மாமாவும் இல்லீன்னா நம்பர் 1 ஆக வந்திருக்கும்’ன்னு…அது தான் உண்மை..
படத்தில் பின்னணி இசை பலவீனமென்று பார்த்தால், இசை அதைவிட கொடுமை. அனைத்து பாடல்களையும் ஹிப்ஹாப் தமிழா தான் பாடவேண்டுமா என்ன ??? பாடல் ஆரம்பித்ததும் மொத்த தியேட்டரே ஒரு நொடியில் மாயமாகிவிட்டது… அனேகன் ”டங்கா மாரி” ஹிட் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் இருந்திருந்தால் கூட படம் இன்னும் வேறு லெவலுக்கு போயிருக்கும்…
படத்தின் மிகப்பெரும் குறை வில்லன் ஆகாஷ்தீப், படத்தில் எடுபடவே இல்லை. சாரி டைரக்டர் சார்.
குறைகள் இருப்பினும் இப்படி ஒரு கதையை எடுத்து தொலைக்காட்சிகள் எப்படியெல்லாம் ஒரு உண்மையை சித்தரிக்கின்றது என தெள்ளத்தெளிவாக காட்டிய தைரியத்திற்க்காக இயக்குனர் கேவி ஆனந்த்க்கு பாராட்டுக்கள்..
Share