13th CavinKare Ability Awards – A.R.Rahman, Chiyaan Vikarm, Kahlad Kakar

13th CavinKare Ability Awards – A.R.Rahman, Chiyaan Vikarm, Kahlad Kakar

ஊனமுற்ற ஐந்து சாதனையாளர்களை கௌரவித்த 13வது கவின்கேர்-எபிலிட்டி விருதுகள்

இந்நாட்டில் ஊனமுற்றவர்களின் சாதனைகளை அங்கீகரித்து கௌரவிக்கிற விருதுகளுள் தனிச்சிறப்பு பெற்ற கவின்கேர் எபிலிட்டி விருதுகள், நாடெங்கிலுமிருந்து 5 சாதனையாளர்களை தேர்வுசெய்து விருதுகள் வழங்கி அவர்களை கௌரவித்திருக்கிறது. பல முக்கியமான ஆளுமைகள், பிரமுகர்கள் மற்றும் வெள்ளிகரமான சமூக தொழில்முனைவோர்கள் முன்னிலையில் சென்னையில் சேத்துப்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தா வெங்கடசுப்பா ராவ் கலையரங்கத்தில் நடைபெற்ற ஒரு மாபெரும் நகழ்வில் இவ்விருதுகள் வழங்ப்பட்டன. இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் சீயான் விக்ரம் மற்றும் திரை படைப்பாளியான பிரஹலாத் காக்கர், நடிகை ரேவதி, இயக்குனர் வஸந்த், தயாரிப்பாளர் தனந்செயன், பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கவிஞர் மதன் கார்க்கி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் போது நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சி அரங்கத்தில் நிறைந்திருந்நத பார்வையார்களின் மனதை மகிழ்ச்சியால் நிரப்பியது. NIFT சென்னை கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்போடு எபிலிட்டி ஃபவுய்டேஷனால், மேற்கொள்ளப்பட்ட செயல்முயற்சியின் வழியாக தயாரிக்கப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்தும் அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் மாடல்கள் மட்டுமல்லாது, ஊனமுற்றோரும் ஆடைகளை அணிந்து இந்த ஃபேஷன் ஷோவில் பங்கேற்றனர்.

தி கவின்கேர் எபிலிட்டி அவார்ட்ஸ் என்ற இந்நிகழ்வானது, ஒரு முன்னணி FMCG நிறுவனமான கவின்கேர் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் ஊனமுற்ற நபர்களுக்கு சமவாய்ப்பு கிடைக்கப்பெறுவதற்காக பணியாற்றிவரும் ஒரு தேசிய அளவிலான தொண்டு நிறுவனமான எபிலிட்டி ஃபவுண்டேஷன் ஆகிய இரு அமைப்புகளாலும் இணைந்து கருத்துருவாக்கம் செய்யப்பட்டு நடத்தப்படுவதாகும். இந்த விருதுகள் 13வருடங்களாக தொடர்ந்து நடந்து வருவது பாரட்டுகுரியதாகும்.

இந்த ஆண்டு விருதுபெறும் சாதனையாளர்கள்
மேம்பட்ட நிலைக்கான கவின்கேர் எபிலிட்டி விருது (CavinKare Ability Award for Eminence)
சவிதா சிங், காஸிபுர், உத்தர பிரதேஷ்

பண்பட்ட தேர்ச்சிக்கான கவின்கேர் எபிலிட்டி விருது (CavinKare Ability Mastery Awards)
K.ஜனார்தனன், சென்னை, தமிழ்நாடு
பிரவீன் வயாஸ், ஜோத்பூர், ராஜஸ்தான்
சித்தார்த் தனேஜா, ஆல்வார், ராஜஸ்தான்

கவின்கேர் எபிலிட்டி சிறப்பு அங்கீகார விருது
S.ராமகிருஷ்ணன், திருநெல்வேலி, தமிழ்நாடு

இந்த விருதுகள் குறித்து கவின்கேர் பிரைவேட் லிமிடெட்-தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு.CK ரங்கநாதன், “வெற்றி மற்றும் அந்தஸ்து ஆகிய இரு அம்சங்களிலும் கடந்த பல ஆண்டுகளாக கவின்கேர் எபிலிட்டி விருது மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றிருப்பதைப் பார்ப்பது எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களது வாழ்க்கைப் பாதையில் கடுமையான பல்வேறு தடைகள் மத்தியிலும் தங்களது கனவுகளை நிஜங்களாக மாற்றியிருக்கிற, இவ்விருதகள வென்றிருக்கிற நபர்களையும் மற்றும் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றவர்களையும் பார்ப்பது உண்மையிலேயே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வழங்குவதாக இருக்கிறது. இவ்விருதகளைப் பெற்றிருக்கும் இவர்கள், இனிவரும் காலங்களிலும் இன்னும் பெரிய சாதனைகளை சாத்தியமாக்கி தங்களைச் சுற்றியுள்ள பிற மக்களுக்கு உண்மையான உத்வேகத்தை வழங்குபவர்களாக இருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

Click here for watch video:

Photo Gallery:

Share