முப்பரிமாணம் படம் எப்படி ?

முப்பரிமாணம் படம் எப்படி ?

நடிகர்கள்: சாந்தனு பாக்யராஜ், ஸ்ருதி டாங்கே, ஸ்கந்தா அஷோக்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : அதிரூபன்

தயாரிப்பு: பொள்ளாச்சி வி. விசு, பொள்ளாச்சி வி. குமார்.

தயாரிப்பு நிறுவனம் : ஷமயாலயா கிரியேஷன்ஸ்

பட விநியோகம்: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

இசை : ஜி. வி. பிரகாஷ்குமார்.

ஒளிப்பதிவு : இராசாமதி

படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்.

கலை : வி. மாயாண்டி.

ஸ்டண்ட்: கோட்டி

ரிலீஸ் தேதி : 03.03.2017

தணிக்கை சான்றிதழ் : U

கால அளவு(duration) : 2 மணி 20 நிமிடங்கள்.

படவகை: ரொமாண்டிக் திரில்லர்

கதை:

 சாந்தனுவும் ஸ்ருதியும் காதலர்கள். இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக பெற்றோர்கள் இவர்களின் காதலை ஏற்க மறுக்கின்றனர். ஸ்ருதியின் பெற்றோர் அவளுக்கு வேறு திருமணம் ஏற்பாடு செய்ய, சாந்தனு மண்டபத்துக்குள் நுழைந்து திருமணத்தை நிறுத்திவிட்டு ஸ்ருதியுடன் வெளியேறுகிறான். ஸ்ருதியின் சகோவும், அப்பாவும் ஸ்ருதியை மீட்பதற்காக சாந்தனுவை விரட்டுவதன் தொடர்ச்சியாக ஏற்படும் சுவாரஸ்யமே மீதிக்கதை.

நேர்மறை:

சாந்தனு முன்பைவிட நடிப்பில் மிகவும் தேர்ந்திருகிறார் என்பதற்கு   முப்பரிமாணத்திலும் அவர்  நேர்த்தியாக செய்திருக்கிறார் என்பதே சாட்சி. ஸ்ருதி ‘பப்ளி’ யாக இருந்தாலும் இடைவேளைக்குப்பிறகு அவரின் கதாபாத்திரம் சூடேறுகிறது. ஸ்கந்தா அசோக்கின் பண்பார்ந்த நடிப்பு படத்துக்கு மெருகேற்றுகிறது. முதல்பாதியில் சில காதல் காட்சிகளும் அழகியலுடன் சில உரையாடல்களும் இயக்குநர் அதிரூபன் விஷயமுள்ளவராக காட்டுகிறது. ஜி.வி. பிரகாஷ்குமாரின் பின்னணி இசை காட்சியை பாதிக்காத அளவில் நன்றாக இருக்கிறது. நடிகர்கள் இத்தனை அழகா என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அளவுக்கு  “லெட்ஸ் டூ பார்ட்டி” பாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. படத்திற்கு தேவையான வற்றை அழகாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் “இராசாமதி”. கோட்டியின் ஸ்டண்ட் காட்சிகளில் சாந்தனு அற்புதமாக பொருந்தியதோடு சில கடினமான காட்சிகளும் செய்திருக்கிறார் அருமை. மற்ற துறைகளான ஒப்பனை, உடை, சிகை அலங்காரம் அனைத்தும் நேர்த்தி. படத்தின் கிளைமாக்ஸ் சிறப்பு.

எதிர்மறை:

இயக்குநர் அதிரூபன் கதையின் சாயலில் ஏற்கனவே மக்கள் பல படங்களை பார்த்துவிட்டனர். திரைக்கதை சற்று மந்தமாகவும், படத்தின் காட்சிகள் யூகிக்ககூடிய அளவிலும் இருப்பது ஏமாற்றமே. சுவாரஸ்யமில்லா கார் சேஸ் காட்சிகளும்,  ஜி.வி. பிரகாஷ்குமாரின் சுமாரான பாடல்களும் படத்திற்கு ஒரு வேகத்தடையே. மாயாண்டியின் கலை பயனில்லை. பட்ஜெட்க்கு ஈடுகொடுக்க  தயாரிப்பாளர்கள் எப்படி அவதிப்பட்டனர் என்பது காட்சிகளில் வெளிப்படை. படத்தின் காட்சிகள் அரதப்பழசாக இருப்பதும், 2ஆம் பாதியில் லாஜிக்குகள் மீறிய காட்சிகளும் சோர்வை ஏற்படுத்துகிறது. படத்தொகுப்பாளர் படத்தின் நீளத்தை ஒரு 15-20 நிமிடங்கள் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தம்பி ராமையாவின் காமெடியில் சிரிப்பு வரவில்லை. ஸ்ருதியின் அப்பா மற்றும் பல கதாபாத்திரங்கள் படத்துக்கு ரசனையை கூட்ட எந்தவகையிலும் உதவவில்லை.

கருத்து:

நிறை குறையுள்ள ஒரு சுமாரான ரொமாண்டிக் திரில்லர்

மதிப்பீடு : 2.75/5

Share