அரவிந்த் சாமியுடன் ஜோடி சேரும் ரித்திகா சிங்

அரவிந்த் சாமியுடன் ஜோடி சேரும் ரித்திகா சிங்

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3“. அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் பூஜையுடன் இன்று இனிதே  துவங்கியது. மேலும் இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, சாந்தினி, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK. சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஆண்டனி, கலை சிவா யாதவ்

Share