அதே கண்கள் – படம் எப்படி ?

அதே கண்கள் – படம் எப்படி ?

த்ரிலர் என்றாலே பேய் படங்கள் தான் என்பதை மாற்றி துருவ நட்சத்திரம், அதே கண்கள் போன்ற படங்கள் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைவது சற்றே ஆறுதல்.  சி.வி.குமாரின் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கலையரசன் கதையின் நாயனகவும், ஜனனி ஐயர் நாயகியாகவும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ஷிவதா நாயர் நடித்துள்ளார். பால சரவணன், அரவிந்த்ராஜ், அபிஷேக், சஞ்சய், லிங்கா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு வசனம் எழுதி, திரைக்கதையிலும் முக்கிய பங்காற்றியுள்ளார் எழுத்தாளர் முகில். திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் ரோகின் வெங்கடேசன்.

கதை:
தனது 15வயதில் பார்வையை இழந்த கலையரசன் முயற்சியை கைவிடாது படித்து நகரில் அனைவரும் விரும்பும் உணவகத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார். அவரது நீண்ட நாள் தோழி ஜனனி ஐயர். கலையரசனின் பெற்றோர்களிடம் கலையரசனை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கிறார். ஆனால் கலையரசன் சம்மதம் சொல்லாததால் அது இழுபறியில் இருக்கிறது.

இந்நிலையில் கலையரசன் ஒரு நாள் கடையை மூடும் நேரத்தில் அவரது கடைக்கு வரும் ஷிவதா, சாலையோரத்தில் பசியில் உள்ள ஒரு பெரியவருக்கு சாப்பாடு தேவைப்படுவதாக சொல்கிறார். நாம் இருவரும் சேர்ந்தே அவருக்கு அந்த உணவை கொடுப்போம் என்க.. கலையரசன் அவருடன் வந்து உணவளிக்கிறார். தினம் தினம் வரும் ஷிவதா கலையரசனை அழைத்துக் கொண்டு சாலையோரத்தில் உள்ளவர்களுக்கு உணவளிக்கிறார். கலையரசனுக்கு அவரது நடவடிக்கைகள் பிடித்து போய் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

தனது காதலை சொல்ல காத்திருக்கும் கலையரசனிடம் வந்த ஷிவதா தனது அக்கா திருமணத்திற்கு வாங்கிய கடனைக் கட்டாததால் கடன்காரர்கள் வந்து மிரட்டுவதாக சொல்கிறார். கலையரசன் மனமிறங்கி தான் அந்த பணத்தை தருவதாக சொல்கிறார். அடுத்த சில மணித்துளிகளில் கலையரசன் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு பார்வை திரும்பகிடைக்கிறது. கண் பார்வை திரும்ப கிடைத்ததும் முதல் வேளையாக தனது காதலியை தேடுகிறார். அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்க, பல இடங்களில் அவரை தேடுகிறார். எங்கு தேடியும் கிடைக்காத ஷிவிதாவை மறக்க இயலாது தவிர்க்கிறார். மாதங்கள் உருண்டோட கலையரசனின் மனதை கரைத்த அவனது அம்மா ஜனனினை திருமணத்துக்கு செய்ய சம்மதம் வாங்குகிறார்.

திருமணத்துக்கு முந்தைய நாள் கடையை அடைக்கும் சமயத்தில் ஷிவிதாவின் அப்பா வருகிறார். தனது மகளை கடன்காரர்கள் கடத்தி சென்று விட்டதாக அழுகிறார். எப்படியாவது காப்பாற்ற வேண்டுகிறார்.
கலையரசன் தனது வீட்டில் உள்ள நகைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் சொல்லும் இடத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் சண்டையில் ஷிவிதா அப்பா இறக்கிறார். ஷிவிதாவை கடத்தல்காரர்கள் அழைத்து செல்கிறார்கள். வீட்டிற்கு திரும்பும் கலையரசன் அங்கு நடந்தவற்றை கூற. திருமணம் நிற்கிறது.

கன்யாகுமரியில் ஷிவிதாவின் அப்பா சாலை விபத்தில் ஒன்றில் இறந்து விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வருகிறது. அதிர்ச்சியடைந்த கலையரசன் கன்யாகுமரிக்கு தனது காதலியை தேடி செல்ல அங்கு அதற்கு மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது.

C3Hze4sXgAUZi3k

கலையரசன் பார்வையற்றவராக வரும் காட்சிகளில் நடிப்பு மிகவும் ரசிக்க வைக்கிறது. ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு அருமை. முகிலின் வசனங்கள் நன்றாக இருக்கிறது. ரோகின் வெங்கடேசனின் திரைக்கதை படத்துக்கு பக்க பலம். ஷிவிதாவின் நடிப்பு அட்டகாசம் அதுவும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் வெகு சிறப்பு.

அனைத்து கண்களும் பார்க்க வேண்டிய படம் அதே கண்கள்.

3.75 / 5

Share